நாள்பட்ட தலைவலியை குணமாக்க வேண்டுமா? அப்போ தொடர்ந்து இந்த பயிற்சியை செய்திடுங்க
நம் உடலில் ஏற்படும் பல வலிகளில் தலைவலி முக்கியமான பிரச்னையாக இருக்கிறது.
தலைவலியை அனுபவிக்காதவர்களே இருக்க முடியாது. மாறுபட்ட காரணங்களால் தலைவலி அவ்வப்போது வருவது என்பது மிகவும் சாதாரணமான விஷயமாக உள்ளது. இதனை ஆரம்பத்திலே சரி செய்ய பல வழிகள் உள்ளன.
அதிலும் தலைவலியால் அவஸ்தைப்படுபவர்களுக்கு வஜ்ஜிராசனம் பெரிதும் உதவியாக இருக்கும். தற்போது அந்த ஆசனத்தை எப்படி செய்யலாம் என்பதை இங்கே பார்ப்போம்.
செய்முறை

குப்புறப்படுத்துக் கால்களை நீட்டி, உள்ளங்கைகளைத் தரையில் பதித்து முன்னோக்கி வைக்கவும்.
மூச்சை வெளிவிட்டு உடலை மேலே உயர்த்தவும் தலையைப் பாதங்களைப் பார்க்குமாறு திருப்பி உச்சந்தலையைத் தரையில் பதிக்கவும்.
முழங்கால்களை மடக்காமல் உள்ளங்கால்களை முன்பாக வைத்து முழுப் பாதமும் தரையில் வைத்து உடலின் எடை கால்கள் மற்றும் தலையில் இருப்பது போல் செய்யவும்.
இந்நிலையில் ஆழமாகச் சுமார் ஒரு நிமிடம் சுவாசித்து மெதுவாக ஆரம்ப நிலைக்கு வரவும். இவ்வாறு இந்த ஆசனத்தை 5 முதல் 7 முறை செய்யவும்.
பலன்கள்
- விளையாட்டு வீரர்களின் களைப்பைப் போக்கும். கணுக்கால்கள், தோள்பட்டை வலுப்பெறுகின்றன.
- இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இது ஏற்ற ஆசனமாகும்.
- இதயம் சரிவரச் செயல்படுகிறது.
- நாள்பட்ட தலைவலியை போக்க உதவுகிறது.
-
நுரையீரலை பலப்படுத்தி நுரையீரல் சம்பந்தமான கோளாறுகளை போக்க உதவுகிறது.
-
மாதவிடாய் நிற்கும் கட்டத்தில் ஏற்படும் பிரச்சினைகளை சரி செய்ய உதவுகிறது.
- ஜீரணத்தைப் பலப்படுத்தவும், மன அழுத்ததைப் போக்கவும் செய்வதால் இதன் காரணமாக ஏற்படக் கூடிய தலைவலியைச் சரி செய்யவும் தவிர்க்கவும் உதவுகிறது.
குறிப்பு
கர்ப்பிணி இதை செய்வதை தவிர்க்கவும். கை மற்றும் கை மணிக்கட்டுகளில் அடிபட்டவர்கள், வலி உள்ளவர்கள் செய்வதை தவிர்க்கலாம்.