அடர்த்தியுடன் நீளமான தலை முடி வேண்டுமா? அப்போ மட்டும் ஃபாலோ பண்ணுங்க
பெண்களின் அழகை அதிகரிக்கும் கூந்தலை அடர்த்தியாக நீளமாக வளர்ப்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
நீளமான தலைமுடி
பொதுவாக பெண்கள் அழகை மேம்படுத்த தலைமுடி முக்கிய பங்கு வகிக்கின்றது. ஆனால் இப்போது தலை முடியை யாரும் பராமரிப்பது இல்லை .
மாசுக்கள் நிறைந்த சுற்றுச்சூழலில் நாம் அதிகம் நேரத்தை செலவிடுவதனால் , முடி கொட்டுதல், அடர்த்தி குறைதல் போன்ற பிரச்சனை ஏற்படுகின்றது.
இன்றைய நவீன காலத்தில் தலை முடியை பராமரிக்க பல நவீன பொருட்கள் வருகின்றன. இதனால் மக்கள் இயற்கையாக வழிமுறையை அடிக்கடி மறந்து இந்த செயற்கை வழிகளை பின்பற்ற ஆரம்பித்து விட்டனர்.
இது தலைமுடியை வளர்ச்சியை குறைப்பதுடன் முடி கொட்டவும் செய்கின்றது. முடி வளர்ச்சி அடைய நாம் நவீன பொருட்களை பயன்படுத்தினால் மட்டும் போதாது.
முறையான பராமரிப்பும் ஊட்டச்சத்தும் தேவை. அந்த வகையில் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு முடி வளர்ச்சியை எவ்வாறு பலப்படுத்தலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
நமது வீட்டில் இருக்கும் கடுகு எண்ணெய், கறிவேப்பிலை, வெந்தயம் ஆகியவற்றைப் பயன்படுத்தி தலைமுடிக்கு வைக்கும் எண்ணெய் தயாரிக்கலாம்.
இந்த எண்ணெய்யை குறைந்நது 3 தொடக்கம் 6 மாதங்கள் தொடர்ந்து பயன்படுத்தினால் முடி உதிர்வை குறைத்து புதிய தலைமுடி வளர உதவும்.
- கடுகு எண்ணெய்
- கறிவேப்பிலை
- ரோஸ்மேரி இலை
- வெந்தயம்
- பாதாம் எண்ணெய்
- விளக்கெண்ணெய்
செய்யும் முறை
முதலில் கடுகு எண்ணையை சூடாக்கி அதில் ரோஸ்மேரி, கறிவேப்பிலை, வெந்தயத்தை சேர்த்து நிறம் மாறும் வரை கொதிக்க வைக்கவும். பின்னர் எண்ணெய்யை ஆற வைத்து போட்டிலில் ஊற்றி அதில் பாதாம் மற்றும் விளக்கெண்ணெய் சமமான அளவில் சேர்க்க வேண்டும்.
கடுகு எண்ணையில் அதிகளவு ஆல்பா ஃபேட்டி ஆசிட் உள்ளதால் இது தலை முடியின் ஈரப்பதத்தை தக்க வைக்க உதவும்.
வெந்தயத்தில் புரதம் மற்றும் B3 உள்ளதால் பொடுகுத் தொல்லையை தடுக்க உதவும். கறிவேப்பிலையில் உள்ள ஆண்டி ஆக்சிடெண்ட் முடியின் வேரை பலப்படுத்தவும் முடி உதிர்வை தடுக்கவும் உதவுகிறது.
விளக்கெண்ணெயில் இருக்கும் ரிசினோலெசிக் ஆசிட் தலைமுடிக்கு தேவையான ஊட்டச்சத்தை கொடுத்து முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.
பாதாம் ஆயிலில் மெக்னீசியம், கால்சியம், ஓமேகா 6 மற்றும் ஓமேகா 9 ஃபேட்டி ஆசிட் மற்றும் ஏ, டி மற்றும் இ போன்ற கொழுப்பு கரையும் வைட்டமின்கள்முடிக்கு தேவையான ஊட்டச்சத்தையும் பளபளப்பையும் தருகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |