சமந்தாவின் இந்த ஹேண்ட்பேக்கின் விலை இத்தனை லட்சமா? ஷாக்கான ரசிகர்கள்....அப்படி என்ன இருக்கு அதுல?
நடிகை சமந்தா அணிந்திருக்கும் ஹேண்ட்பேக்கின் விலையை கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நடிகை சமந்தா தற்போது துபாய்க்கு சுற்றுலா சென்றுள்ளார். துபாயில் இருந்து அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார்.
அவர் சிரித்த முகமாக இருப்பதை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் சமந்தா அணிந்திருக்கும் ஹேண்ட்பேக்கின் விலை தற்போது இணையத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.
இந்நிலையில் அவர் தன் தோழியுடன் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தில் வைத்திருக்கும் ஹேண்ட் பேக்கை பார்த்தவர்கள் அதன் விலையை கூகுள் செய்துள்ளனர்.
சமந்தா வைத்திருக்கும் J'adior ஹேண்டபேக்கின் விலை ரூ. 1.30 லட்சம். ஒரு ஹேண்ட்பேக்கிற்கு ரூ. 1.30 லட்சமா என்று பலரும் வியக்கிறார்கள்.
