முதன்முதலாக நடைபயிற்சி போறீங்களா? அப்போ இந்த தவறை மட்டும் செய்யாதீங்க
புதிதாக நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்களை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய காலத்தில் பெரும்பாலான நபர்கள் எடை அதிகரித்து காணப்படுகின்றனர். இதனை குறைப்பதற்கும் அதிக சிரமத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
உடல் எடையை குறைப்பதற்கு முக்கியமான பயிற்சி என்றால் அது நடைபயிற்சி தான். அனைத்து வயதினரும் மேற்கொள்ளக்கூடிய நடைபயிற்சியினால் எடை குறைவது மட்டுமின்றி, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் ஆகியவை வராமல் தடுக்கலாம்.
புதிதாக நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில விடயங்களை தெரிந்து கொள்வோம்.
தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள்
புதிதாக நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் காயங்கள், எலும்பு தேய்மானம் ஏற்படாமல் இருப்பதற்கு நல்ல காலணிகளை அணிய வேண்டும். குஷனிங் கொண்டுள்ள ஷூ அல்லது காலணிகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.
நடக்கும் போது கரடு முரடனான இடங்களில் நடக்காமல் சமதளமாக இருக்கும் இடத்தில் தான் நடக்க வேண்டும்.
முதலில் சிறிதளவு நடக்க ஆரம்பித்து பின்பு நாட்கள் செல்ல செல்ல நடைபயிற்சியின் நேரத்தை அதிகரித்துக் கொள்ளலாம். நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் முதல் 3 வாரத்தில் 10 முதல் 15 நிமிடங்கள் நடந்தால் போதும்.
நடைபயிற்சி மேற்கொள்வதால் இதய நோய் அபாயம் குறைவதுடன், தினமும் நடப்பதால் மூட்டுகள் மற்றும் தசைகள் உறுதியாக வலுப்பெறும்.
உடம்பில் நெகிழ்வுத் தன்மையை பராமரிப்பதற்கு உதவுவதுடன், மனநிலையை மேம்படுத்தவும், மனச்சோர்வு காணப்படாமலும் இருக்கும்.
கவனிக்க வேண்டிய விடயங்கள்
நடைபயிற்சி மேற்கொள்ளும் போது வியர்வையை உறிஞ்சும் வகையிலான மென்மையான மற்றும் காற்றோட்டமான துணிகளை அணிவது அவசியம்.
நடக்கும்போது தொண்டை வறட்சியை தடுக்க, அதிக வியர்வை வெளியேற்றத்தால் உடலில் நீரிழப்பு ஏற்படாமல் இருப்பதற்கு தண்ணீர் பாட்டில் கையில் வைத்துக் கொள்ள வேண்டும்.
நடைபயிற்சியின் போது சூரிய ஒளி உடம்பிற்கு அவசியமாகும். ஆதலால் காலை அல்லது மாலை வெயிலில் நடக்க செல்லலாம்.
சரியான தோரணையில் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு நடந்தால் உடலுக்கு உறுதியையும், முழு பலனையும் பெற முடியும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |