வீட்டில் சக்கரைவள்ளிக்கிழங்கு இருக்கா? அப்போ தோசை இனிமேல் இப்படி செய்ங்க
காலையில் உணவு உண்பது மிகவும் முக்கியமாகும். இந்த காலை உணவை தோசை இட்லி என செய்து அதிகமாக சாப்பிடுவார்கள். தோசை பல வகையாக செய்யப்படும்.
இதில் உழுத்து துக்கிய பங்கு வகிக்கும். ஆனால் இவை ஆரோக்க்கியத்தில் சிறந்ததா? என கேட்டால் ஆரோக்கியத்தில் சிறந்த தோசை என்றால் அதில் பல சத்து பொருட்கள் சேர்க்கப்பட வேண்டும்.
அப்படியான ஒரு ரெசிபி தான் இந்த பதிவில் பார்க்கப்போகின்றோம். சக்கரைவள்ளிக்கிழங்கு அடை தோசை எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
தேவையானப் பொருட்கள்
- கேப்பை மாவு - அரை கப்
- சர்க்கரை வள்ளிக்கிழங்கு - 2
- பச்சை மிளகாய் - 2
- எண்ணெய் - தேவையான அளவு
- சீரகம்- சிறிதளவு
- சின்ன வெங்காயம் - 10
- கறிவேப்பிலை - சிறிதளவு
- உப்பு - சிறிதளவு
செய்முறை
காலை உணவாக இந்த பதிவில் கச்சரைவள்ளி்கிளங்கு அடை தோசை செய்யலாம். இதற்கு முதலில் கிழங்கை இட்லி பாத்திரத்தில் 10 நிமிடங்கள் ஆவியில் வேக வைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் கேப்பை மாவை சிறிதளவு தண்ணீர் ஊற்றி பிசைந்துக் கொண்டு, வேக வைத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கையும் சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
இதனுடன் சிறிதளவு உப்பு மற்றும் காரத்திற்கு ஏற்ப பச்சை மிளகாய் சேர்த்து பிசைய வேண்டும். சிறிதளவு சீரகம், மிளகு, கறிவேப்பிலை, சின்ன சின்னதாக அரைத்து வைத்துள்ள வெங்காயத்தைச் சேர்த்து பிசைந்துக் கொண்டால் போதும்.
அடை செய்வதற்கான மாவு தயாராகி விடும். இதன் பின்னர் தோசைக் கல்லை சூடேற்றி, பிசைந்து வைத்துள்ள மாவை அடையாக தட்டிப் போட வேண்டும்.
இருபுறமும் எண்ணெய் ஊற்றி வேக வைத்து எடுத்தால் போதும். சுவையான சர்க்கரை வள்ளிக்கிழங்கு அடை தோசை தயார். இதை குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் காலை சத்துள்ள ஒரு உணவாக எடுத்துக்கொள்ளலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |