நடைபயிற்சியின் போது தண்ணீர் பருகலாமா? பலருக்கும் தெரியாத உண்மை
நடைபயிற்சி செய்யும் போது தண்ணீர் குடிப்பது நல்லதா என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தண்ணீர் மனிதர்கள் உயிர்வாழ மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கின்றது. உடம்பில் வெப்பநிலையை சீராக வைப்பதற்கும், ரத்த அழுத்தத்தினை கட்டுப்படுத்த சரியான அளவில் தண்ணீர் அருந்துவது மிகவும்
மேலும் உடம்பில் உள்ள நச்சுக்கள் வெளியேறுவதற்கும், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும், எடையைக் குறைக்கவும் செய்கின்றது.
Image courtesy: Shutterstock
நடைபயிற்சியின் போது தண்ணீர் குடிக்கலாமா?
நாள் ஒன்றிற்கு பெண்கள் இரண்டாயிரம் கலோரிகளை எடுத்துக் கொள்வதற்கு, 2 லிட்டர் தண்ணீர் அவசியம் பருக வேண்டும்.
ஆண்கள் 2500 கலோரிகளை எடுத்துக் கொள்ளும் நிலையில், 2.5 லிட்டர் தண்ணீரை குடிக்க வேண்டும். அதே போன்று காலை வெறும் வயிற்றில் ஒன்று அல்லது இரண்டு டம்ளர் குடிக்கலாம்.
நடைபயிற்சி செய்யும் போது தண்ணீர் பருகுவது உடல் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகின்றது. மேலும் படபடப்பு, சோர்வு, தலைவலி போன்ற நீரிழப்பிற்கான அறிகுறிகளை தடுப்பதற்கு சிறிதளது தண்ணீர் எடுத்துக் கொள்ளலாம்.
இதனால் உங்களுக்கு சோம்பலான உணர்வு நீங்கி புத்துணர்ச்சி கிடைக்குமாம். அதுவே உயரமான இடத்தில் நடைபயிற்சி மேற்கொள்ளும் போது, வெப்பம் அதிகமாக இருந்தால் சற்று அதிகமான தண்ணீரை பருக வேண்டும்.
சாதாரண தண்ணீரை மட்டுமே பருக வேண்டும். குளிர்ந்த தண்ணீரை தவிர்க்கவும். இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நடப்பவராக இருந்தால், எலக்ட்ரோலைட்ஸ் கலந்த பானத்தை பருகவும்.
வீட்டில் தயார் செய்யும் உப்பு கலந்த எலுமிச்சை நீர் அருந்தலாம். காலையில் சர்க்கரை கலக்காத காபி அருந்துவது நடக்கும் போது உற்சாகமாக இருக்கும்.
மேலும் சூப் எடுத்துக் கொள்ளலாம். அதுவே தண்ணீர் குடித்துவிட்டு நடைபயிற்சி மேற்கொண்டால் சிரமத்தை ஏற்படுத்தும்.
ஆனால் உடலின் வெப்பநிலை அதிகரிப்பதை தடுத்து, ஆற்றலை அதிகரிக்கிறது. சோர்வு நீங்கி புத்துணர்வாக நடப்பதற்கு சிறிதளவு தண்ணீர் குடிப்பது நல்லது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |