வாக்கிங் செல்பவர் இந்த ஒரு விடயத்தில் கவனம் தேவை- நீங்களும் தெரிஞ்சிக்கோங்க
பொதுவாக உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள நடைபயிற்சி அவசியம்.
ஒருவர், மனச்சோர்வு, பதற்றம் போன்ற உளவியல் ரீதியான பிரச்சினைகளில் இருக்கும் பொழுது அதனை சமாளிப்பதற்கு நடைபயிற்சி தேவைப்படுகிறது.
சிலர் நடக்கும் பொழுது, நாம் வழக்கமாக நடப்பது போன்று நடந்து செல்வார்கள். இதனை ஒரு நாள் செய்து விட்டு, மற்ற நாட்கள் சோம்பலாக உள்ளது என தட்டிக்கழிப்பார்கள்.
மாறாக உடலை ஆரோக்கியமாகவும், கட்டுகோப்பாகவும் வைத்து கொள்ள வேண்டும் என்றால் ஆய்வின்படி, ஒரு நாளில் 10 ஆயிரம் காலடிகள் நடப்பதை விட பவர் வாக் மாதிரியான வேகமான நடைபயிற்சி செய்ய வேண்டும். ஏனெனின் இந்த பயிற்சியில் அதிகமான பலன்கள் கிடைக்கும்.
அப்படியாயின், நடைபயிற்சி செய்யும் பொழுது என்னென்ன விடயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
நடைபயிற்சியின் பலன்கள்
1. ஆய்வுகளின்படி, ஒருவர் நாளொன்றுக்கு பத்தாயிரம் காலடிகள் நடப்பதன் மூலம் டிமென்ஷியா, இதய நோய்கள், புற்றுநோய் மற்றும் நாள்பட்ட நோய்களின் இறப்பை அபாயத்தை குறைக்கலாம்.
2. ஒவ்வொரு தனிநபரும் ஒரு நாளுக்கு பத்தாயிரம் காலடிகள் நடந்தால் அவர்கள் தினம் தினம் வேகமாக நடப்பார்கள். இதுவே அவர்களின் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ளும். தினமும் 3,800 காலடிகள் நடப்பவர்கள் டிமென்ஷியா நோய் அபாயத்தில் இருந்து 25% விடுபெறலாம் எனவும் கூறப்படுகிறது.
3.ஒருவர் ஒவ்வொரு 2 ஆயிரம் காலடிகள் நடக்கும் பொழுதும், அவர்கள் அகால மரணத்திற்கான அபாயத்தை 8-11 சதவீதம் குறைக்கும் சக்தி கிடைக்கும் என கூறப்படுகிறது. தினமும் 9,800 காலடிகள் நடந்தால் டிமென்ஷியா வராமல் இருக்க 50 சதவீதம் வாய்ப்புள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |