பாம்பை நடக்க வைத்து சாதித்த இளைஞன் - வாயடைத்துபோன பார்வையாளர்கள்; வைரல் வீடியோ
இன்றைய நவீன உலகில் பலவிதமான வேடிக்கையான வீடியோக்கள் வைரலாவது உண்டு. அதில் நாம் காண்கின்ற வீடியோக்கள் சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன.
சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. அந்த வகையில், பாம்பு ஒன்று நடப்பது போன்ற வீடியோ காட்சியானது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அதாவது, பிரபல யூடியூப்பர் ஆலன் பான் என்ற பக்கத்தில் யூடியூப் சேனலில் பாம்பை நடக்க வைக்க ஒரு புது விதமான நவீன ரோபோடிக் கால்களை உருவாக்கி அதனைப் பாம்புக்குப் போட்டு நடக்க வைத்து வெற்றி பெற்றுள்ளார்.
இந்த வீடியோ காட்சி தற்போது 2.1 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. பலரையும் வியப்பில் ஆழ்த்தியிருந்தாலும், நெட்டிசன்கள் பலரும் இந்த கண்டுப்பிடிப்பு மற்றும் முயற்சிக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.