ஒரே ஒரு பேஸ்புக் பதிவால் பண மழையில் நனைந்த பெண் ஊழியர்- எப்படி தெரியுமா?
அமெரிக்காவில் உள்ள அட்லாண்டா IHOP என்ற உணவகத்தில் ரீட்டா ரோஸ் (Rita Rose) என்ற பெண் வாடிக்கையாளர் உணவகத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது உணவு பரிமாரிய ஜாஸ்மின் காஸ்டிலோ (Jazmine Castillo) என்ற பெண் கனிவுடன் நேர்தியாக அணுகியதால் அப்பெண்ணுக்கு 20 டாலரை டிப்ஸ்காக கொடுத்து இருக்கிறார்.
இதைப்பெற்றுக்கொண்ட அந்த பெண் இந்த 20 டாலர்கள் எனக்கான பெரிய உதவி என கூறியிருந்தார். மேலும், (Jazmine Castillo) ஜாஸ்மினின் குடும்ப சூழல் குறித்தும் விசாரித்து இருக்கிறார்.
இந்தப் பணியை செய்ய அவருக்கு விருப்பமில்லை என்றும் குழந்தைக்காகவும், குடும்பத்திற்காகவும் இந்த பணியை செய்து வருவதாக தெரிவித்து இருக்கிறார்.
இதனால், ரீட்டா ரோஸ் என்பவர் அவரைப்பற்றி பேஸ்புக் பதிவில் உங்களால் முடிந்த உதவியை ஜாஸ்மினுக்கு செய்யுங்கள்’ என ரீட்டா ரோஸ் பதிவிட்டுள்ளார். அந்த பதிவுக்கு கீழே ஜாஸ்மினின் ‘கேஸ் அப்’ விவரங்களையும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த பதிவைக்கண்ட பலரும் ஜாஸ்மினின் கேஸ் ஆப் செயலுக்கு அமெரிக்க டாலர்களை அனுப்பத் தொடங்கி உள்ளனர். தற்போது வரை அவருக்கு 10 ஆயிரம் டாலர்களை இந்திய மதிப்பில் சுமார் 7 லட்ச ரூபாய் வரையில் கிடைத்து இருக்கிறது.
இதுகுறித்து பேசிய ஜாஸ்மின் என்பவர் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்ததுடன், என போனில் உள்ள கேஸ் அப் செயலி ஒலித்துக்கொண்டே இருக்கிறது உதவிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்து இருக்கிறார்.