24 வயது தமிழ்பெண்ணை பாராட்டிய கிரிக்கெட் பிரபலம்! ஏன் தெரியுமா?
இந்திய அணியின் முன்னாள் வீரரான விவி எஸ் லக்ஷ்மண் இளம்பெண் ஒருவரை பாராட்டி டுவிட் செய்தது வைரலாகி வருகிறது.
ஈரோடு மாவட்டம் சாலையோர நடைபாதையில் இருக்கும், பிச்சைக்காரர்கள் மற்றும் மதுக்கு அடிமையானவர்கள், ஆதரவற்றோர் மற்றும் தோல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இளம் பெண் மனீஷா(24) என்ற இளம்பெண் அவர்களை மீட்டு மறுவாழ்வு அளித்து வருகிறார்.
ஆதரவற்றோருக்கு உதவி
அதன்படி, அவர்களை மீட்டு உரிய சிகிச்சை அளித்தும், புதிய உடைகளை கொடுத்தும், மறுவாழ்வை அளித்து பலரின் பாராட்டுக்களை பெற்றுள்ளார்.
அதுமட்டுமின்றி அவர்களில் சிலருக்கு வேலை சம்மந்தமான உதவியை செய்து வருகிறார். சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி.
மனீஷாவின் பெற்றோர் கிருஷ்ணசாமி-கீதா., பெற்றோர் இறைச்சிக்கடை வைத்துள்ளனர்.
பாராட்டிய லக்ஷ்மண்
இவர் பிஎஸ்சி நர்சிங் படித்துவிட்டு செவிலியர் கல்லூரியில் விரிவுரையாளராக வேலை செய்கிறார்.
இதுவரை 150 மனநலம் பாதிக்கப்பட்டவ்ர்களை மீட்டுள்ளார், தனி நபராக செய்யாமல் நண்பர்களுடன் சேர்ந்து இந்த சேவையை செய்து வருகிறார்.
இவரின் சேவையை பாராட்டி விவிஎஸ் லக்ஷ்மண் ட்விட்டர் பக்கத்தில் பாராட்டி டிவிட் செய்துள்ளார்.
K Manisha (24), a lecturer in Tamil Nadu’s Erode district has tirelessly rescued and rehabilitated 100’s of beggars, abandoned people,drug addicts,destitutes & ones afflicted with terrible diseases in a very sensitive and holistic way, also helping a lot of them in getting jobs. pic.twitter.com/5bvn4U34JL
— VVS Laxman (@VVSLaxman281) March 31, 2022