ஸ்டாலின் மேடையில் பேச, தெறித்து சுண்டல் வாங்க சென்ற தொண்டர்கள்.. பரபரப்பை ஏற்படுத்திய பிரச்சாரம்!
தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தல் வருவதால் தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக தங்களது தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுத்து விளம்பரப்படுத்தி வருகின்றன. இதையடுத்து, சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் கடந்த இரண்டு மாதங்களாகவே தனது தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளார்.
தற்போது நான்காவது கட்டமாக நேரடியாக ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று 'உங்கள் தொகுதிகள் ஸ்டாலின்' என்ற தலைப்பில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். மேலும், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் திருவண்ணாமலையில் முதல் கூட்டம் மக்கள் குறைகேட்பு கூட்டம் ஆரம்பித்த போதே ஸ்டாலினிடம் மனு அளித்த தொண்டர் ஒருவர், தனக்கு இரண்டு கறவை மாடுகள் வேண்டும் என்று கேட்க., அந்த மனுவை படித்த மு க ஸ்டாலின் கணவரை காணவில்லை என்று படித்தார்.
இது குறித்த காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகியது. இந்த நிலையில், ஸ்டாலின் பங்கேற்ற 'உங்கள் தொகுதிகள் ஸ்டாலின்' நிகழ்ச்சியில் போடப்பட்டிருந்த பந்தலில் மக்கள் கூட்டமே இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டதால் திமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதுலும், குறிப்பாக மதுரை மாவட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில், மு க ஸ்டாலின் மேடைக்கு வருவதற்கு முன்பே போடப்பட்டிருந்த இருக்கைகள் பாதி காலியாகிவிட்டது.கூட்டத்துக்கு அழைத்து வரப்பட்டவர்கள் பலரும் ஸ்டாலின் மேடையில் பேசிக் கொண்டிருக்க, வந்தவர்கள் மைதானத்தை சுற்றி சுற்றி வலம் வந்து கொண்டிருந்தனர்.
இதுபோலவே, தொடர்ந்து ஸ்டாலின் மேடையில் ஏறும் முன்பே அழைத்து வரப்பட்டவர்கள் மைதானத்தை சுற்ற ஆரம்பித்து விடுகின்றர். இதனையடுத்து மைதானத்தில் சுற்றி பார்க்க என்னதானிருக்கிறது என்று ஐ பேக்-ன் திமுக டீம் ஆய்வு செய்ததில், அங்கெ சுண்டல் வியாபாரம் படு ஜோராக நடந்து கொண்டு இருந்தது.
இதனால், ஸ்டாலின் மேடையில் தீயாய் பேசி கொண்டு இருக்க., மைதானத்தில் சுண்டல் வியாபாரம் அனல் பறக்க சுட சுட நடந்து கொண்டு இருந்துள்ளது.
உடன்பிறப்புகள் சுண்டலா? இல்லை தளபதியா., என்ற மன போட்டியில்., சுண்டல் என்று தங்கள் இருக்கையை விட்டு., இரு கையிலும் சுண்டலோடு வளம் வர தொடங்கியுள்ளனர்.
இச்சம்பவத்தால், ஸ்டாலின் பேசும் கூட்டங்களில் சுண்டல், பொரி விற்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளதாம் ஐ பேக்-ன் திமுக டீம். . இச்சம்பவம் சிறிதுநேரம் பரபரப்பை ஏற்படுத்திருகிறது.