நட்சத்திர ஹோட்டலுக்கு சென்று சில்லறை அடுக்கி வைத்த இளைஞர்! பின்பு காத்திருந்த அதிர்ச்சி!
தாஜ் ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்டுவிட்டு அதற்கான பணத்தை சில்லறை நாணயங்களாக செலுத்திய நபரின் வீடியோ காட்சி இணையவாசிகளை மிரள வைத்துள்ளது.
நட்சத்திர ஹோட்டல்களின் விதிமுறைகள்
பொதுவாக 5 ஸ்டார் ஹோட்டல்களில் தங்குவதற்கு மற்றும் சாப்பிடுவதற்கு என கலாச்சாரம், கட்டுபாடுகள், உடை, பழகும் விதம், கட்டணம் உள்ளிட்ட கட்டுபாடுகள் இருக்கின்றன.
இதனை முறையாக பின்பற்றாத பட்சத்தில் ஹோட்டல்களின் விதிகளின் படி குறித்த வாடிக்கையாளருக்கு சில ஆப்ஷன்கள் வழங்கப்படும்.
இதன்படி, மும்பையில் உள்ள தாஜ் ஹோட்டலுக்கு சென்ற சித்தேஷ் என்ற இளைஞர், சாப்பிடுவதற்காக பீட்சா மற்றும் மாக்டெயில் ஆர்டர் செய்துள்ளார்.
சித்தேஷ் துணிவான செயல்
சாப்பிட்டு முடித்த பின்னர் வழமைப் போல், கட்டணம் அறவீட்ட சீட்டு அவர் முன் வைக்கப்பட்டது. அப்போது அந்த பணத்தை பணமாகவோ அல்லது கிரெடிட்/டெபிட் கார்டாகவோ செலுத்தாமல் கையிலுள்ள சில்லறை நாணயங்கள் மூலம் கொடுத்துள்ளார்.
அப்போது பணியாளர் பணத்தை எடுக்க வரும் போது சித்தேஷ் அடுக்கி வைத்திருந்த சில்லறைகளை பார்த்து ஷாக்கானதுடன், சிரித்த முகத்துடன் பணத்தை செலுத்த சென்றுள்ளார்.
இந்த சம்பவத்தை சித்தேஷ் அவர்கள் வீடியோவாக பதிவு செய்து தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதனை பார்த்த இணையவாசிகள், “ சித்தேஷ் செயலை பாராட்டியதுடன், இவ்வாறு தான் சில ஹோட்டல்களுக்கு பாடம் புகட்ட வேண்டும்.” என கருத்துக்களை பதிவிட்டுள்ளார்கள்.