ரஷ்ய அதிபர் புதின் 3 ஆண்டுகள் மட்டுமே உயிருடன் இருப்பார்! மருத்துவர்கள் எச்சரிக்கை
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து போர் தொடுத்து வரும் நிலையில் ரஷ்யா அதிபர் புதின் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துவருவதாக செய்திகள் வெளியாகின.
இதனிடையில், இங்கிலாந்தை சேர்ந்த முன்னாள் உளவாளியான கிறிஸ்டோபர் ஸ்டீலி என்பவர் புதினுக்கு என்ன நோய் என்பதை சரியாக தெரியவில்லை. ஆனால் அவர் தீவிரமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்திருந்தார்.
புற்றுநோயின் தீவிரம்
இந்நிலையில் இதற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட புதின் இன்னும் 3 ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழ்வார் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
மேலும், அவரது பார்வைத் திறன் படிப்படியாக பலவீனமடைந்து வருகிறது. அவரை கண்ணாடி அணியுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

மருத்துவர்களின் எச்சரிக்கை
ஆனால் கண்ணாடி அணிய மறுத்துள்ளார். அதனால் கண் எரிச்சல் அதிகமாகியுள்ளது. இவரது பணிகளை உளவுத் துறை தலைவரும், தற்போதைய பாதுகாப்பு கவுன்சில் தலைவருமான நிகோலாய் பெட்ருஷேவ் கவனித்து வருகிறார்.
தொடர்ந்து, புடினின் நோய் மற்றும் மருத்துவ அறிக்கை தொடர்பான விபரங்களை ரஷ்யா இதுவரை வெளியிடவில்லை என கூறப்படுகிறது.