நாஞ்சில் திருநங்கையை ஏமாற்றியது உண்மையோ? சிக்கிய ஆதாரம்! வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்
நான் கொஞ்சம் பொசசிவ் என்பது எனக்குத் தெரியும், ஆனால் என்னை நம்புங்கள், நான் உன்னை மிகவும் நம்புகிறேன், நான் பாதுகாப்பாக இருக்கிறேன் ஏனென்றால் நான் உன்னை ஒருபோதும் இழக்க விரும்பவில்லை... என குறிப்பிட்டு,திருநங்கை வைஷுலிசா தற்போது வெளியிட்டுள்ள உருக்கமான காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நாஞ்சில் விஜயன் - திருநங்கை சர்ச்சை
சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயன் தன்னை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி என்னிடம் பாலியல் ரீதியான தொடர்பைக் கொண்டிருந்தார், மனைவியாகவும் நான் வாழ்ந்திருக்கிறேன். என திருநங்கை வைஷுலிசா அண்மையில் புகார் கொடுத்திருந்தார்.
அதனை தொடர்ந்து நாஞ்சில் விஜயன் “நானும் அந்த பொண்ணும் சாதாரண நண்பர்கள் தான். எங்களுக்குள் இருப்பது தவறான தொடர்பு இல்லை என மனைவியை ஆதாரமாக நிறுத்து ஒரு காணொளியை வெளியிட்டு விளக்கம் கொடுத்தார்.
இந்த காணொளிக்கு பதில் கொடுக்கும் வகையில் தற்போது, திருநங்கை வைஷுலிசா தன்னிடம் வாங்கிய பணத்தை மனசாட்சியிருந்தால் திருப்பி கொடுங்க என்று கேட்டுக்கொண்டுள்ளதுடன், பல்வேறு விடயங்கள் பற்றியும் கேள்வி எழுப்பி ஒரு காணொளியை வெளியிட்டர்.
இப்படி இந்த பிரச்சினை தற்போது இணையத்தில் பொது பிரச்சினையாக மாறியுள்ளது. இந்த விடயம் குறித்து இணையத்தில் பலரும் கருத்து தெரிவித்து காணொளிகளை பகிர ஆரம்பித்துவிட்டார்கள்.
இந்நிலையில், நான் கொஞ்சம் பொசசிவ் என்பது எனக்குத் தெரியும், ஆனால் என்னை நம்புங்கள், நான் உன்னை மிகவும் நம்புகிறேன், நான் பாதுகாப்பாக இருக்கிறேன் ஏனென்றால் நான் உன்னை ஒருபோதும் இழக்க விரும்பவில்லை... என குறிப்பிட்டு,திருநங்கை வைஷுலிசா தற்போது வெளியிட்டுள்ள உருக்கமான காணொளி இணையத்தில் கவனம் பெற்று வருகின்றது.
இந்த காணொளியில், நாஞ்சில் விஜயன் நடந்துக்கொள்ளும் விதம் இவர் வைஷுலிசாவை காதலித்திருக்கின்றார் என்பதை உறுதிப்படுத்தும் வகையில், இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இதனால் இதுவரையில், நாஞ்சிலுக்கு ஆதரவாக பேசியவர்கள் தற்போது, வைஷுலிசா தரப்பிலும் உண்மை இருக்ககூடும் என்ற பார்வையில் பார்க்க ஆரம்பித்திருக்கின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |