பாருவின் பிறந்தநாளை அமர்களப்படுத்திய கம்ருதீன்! படுவைரலாகும் காணொளி!
விஜே பார்வதியில் 30 ஆவது பிறந்த நாளுக்கு கம்ருதீன் சர்ப்ரைஸ் கொடுத்து அமர்க்களப்படுத்திய காணொளி தற்போது வெளியாகி இணையத்தில் படுவைரலாகி வருவதுடன் பாருவுக்கு வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றது.
பிக்பாஸ் பார்வதி
பிக்பாஸ் சீசன் 9 இல் ரெட் கார்டுடன் வெளியேறிய vj பார்வதி மற்றும் கம்ருதீன் பற்றி சொல்லி தான் தெரிய வேண்டும் என்பது கிடையாது.

என்னதான் ரெட் கார்டுட்ன் வெளியேறினாலும் மக்கள் மத்தியில் பாரு கம்மு ஜோடிக்கு அமோக வரவேற்ப்பு இருக்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மை.
பிக்பாஸ் இந்நிகழ்ச்சிக்கு பிறகும் பார்வதி மற்றும் கம்ருதீன் நிகழ்ச்சியில் இருந்தது போல ஒன்றாக சுற்றி வருகிறார்கள். நிகழ்ச்சிகள் செல்வது, புகைப்படங்கள் எடுப்பது என இப்போது நன்றாக பழகி வருகிறார்கள்.

தற்போது பார்வதி விஜய் சேதுபதி நடித்துள்ள முத்து என்கிற காட்டான் வெப் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த வெப் தொடருக்கும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு காணப்படுகின்றது. இந்நிலையில், விஜே பார்வதியின் 30 வயது பிறந்த நாள் கொண்ட காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |