மணிமேகலைக்கு என்னாச்சி...! காலில் கட்டுப் போட்டு பார்க்கவே பரிதாபமாக இருக்கும் புகைப்படம்
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிரபலமாக மணிமேகலையின் தற்போதைய புகைப்படம் ஒன்று இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது.
வி.ஜே மணிமேகலை
17 வயதில் தொகுப்பாளினியாக மாறிய மணிமேகலை 14 ஆண்டுகளாக தொகுப்பாளினியாக இருந்து அனைவரையும் மகிழ்வித்து வருகிறார்.
அதிலும் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்கள் மத்தியில் அதிகம் கவரப்பட்டது. இந்த நான்கு சீசனிலும் கோமாளியாக இருந்த மணிமேகலை விதவிதமாக கெட்டப் போட்டு அனைவரையும் கவர்ந்தவர்.
இவ்வாறு மக்களை விரும்ப வைத்துவிட்டு தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகி சொந்தமாக வீடு கட்டி வருவதாகவும் அறிவித்து பல போஸ்டுகளை போட்டு வந்தார்.
காலில் கட்டுடன் மணிமேகலை
மணிமேகலை சமூக வலைத்தளங்களில் அதிகம் ஆக்டிவ்வாக இருக்கும் மணிமேகலை எப்போது எதாவது செய்து அதனை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்திருந்தார்.
இந்நிலையில், அவர் நேற்று அவர் காலில் அடிப்பட்டு கட்டுப்போட்டு இருப்பது போல பதிவொன்றை பதிவிட்டிருந்தார். அதில், "எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் தன்னுடைய காலில் பலத்த அடி பட்டுவிட்டதாகவும், தன்னால் எழ கூட முடியவில்லை என்றும், மனசோர்வுடன் இருப்பதாகவும் அதில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதனால் ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் சொல்லி வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |