7 வருஷமாகிடுச்சு... இனியும் நடக்காது அத பத்தி பேசாதீங்க- DJD-ல் கண்கலங்கி நின்ற மணிமேகலை
“7 வருஷமாகிடுச்சு.. இனியும் நடக்காது அத பத்தி பேசாதீங்க..” எனக் கண்ணீருடன் மணிமேகலை பேசியது அங்கிருந்தவர்களை கவலையடைய வைத்துள்ளது.
Vj மணிமேகலை
பிரபல தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தன்னுடைய மீடியா பயணத்தை ஆரம்பித்தவர் தான் மணிமேகலை.
இதன் பின்னர் படிப்படியாக வளர்ச்சிக் கண்டு பிரபல தொலைக்காட்சியில் டாப் நிகழ்ச்சிகளின் ஒன்றான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக வலம் வந்தார்.
இதனை தொடர்ந்து கோமாளியிலிருந்து விலகி, அதே நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்து வந்தார். அப்போது குக்காக வந்த பிரியங்காவுடன் ஏற்பட்ட வாக்குவாதங்கள் காரணமாக பாதி நிகழ்ச்சியில் இருந்து விலகினார்.
தற்போது ஜு தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் விஜய்யுடன் சேர்ந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
7 வருடங்கள் நடக்கல.. இனியும் வாய்ப்பு இல்ல..
இந்த நிலையில், கடந்த வாரம் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் பக்தி பரவசம் சுற்று சென்றது.
அப்போது மணிமேகலையிடம் விஜய், இந்த காணிக்கையை மனதில் ஏதாவது ஆசை இருந்தால் அதனை நினைத்துக் கொண்டு போடு எனக் கூற, அதற்கு மணிமேகலை கண்ணீருடன், “ நான் பெற்றோர்களை எதிர்த்து தான் திருமணம் செய்து கொண்டேன்.
அதன் பின்னர் நான் பல கஷ்டங்களை அனுபவித்திருகிறேன். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் என்னுடைய அம்மா, தம்பி இருவரும் வந்து என்னுடன் பேசினார்கள். ஆனால் என்னுடைய அப்பா திருமணம் செய்து 7 வருடங்களாகிறது. ஆனாலும் இதுவரையில் அவர் என்னுடன் பேசவில்லை.
மாறாக, அவர் இனியும் பேசுவார் என்ற நம்பிக்கை இல்லை.. நான் நன்றாக இருக்க வேண்டும் என்று தான் குடும்பத்தினர் ஆசைப்பட்டார்கள். நான் தற்போது நன்றாக இருக்கிறேன். அப்படி பேசாமல் இருப்பது தான் கவலை..” என்பது போல் பேசியிருக்கிறார்.
மணிமேகலையை சிரித்த பார்த்த டான்ஸ் ஜோடி டான்ஸ் மேடை, அழும் பொழுது தாயாக மாறி ஆறுதல் கூறியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |