இதுதான் கடைசி படப்பிடிப்பு! vj மணிமேகலை வெளியிட்ட எமோஷ்னல் காணொளி வைரல்
தொகுப்பாளினி மணிமேகலை கடைசி படப்பிடிப்பு தினம் என குறிப்பிட்டு தற்போது வெளியிட்டுள்ள எமோஷ்னல் காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
விஜே மணிமேகலை
தமிழ் சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளர்களுள் ஒருவர் தான் மணிமேகலை.சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக தன்னுடைய மீடியா பயணத்தை ஆரம்பித்த இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைத்தது.
பின்னர் விஜய் தொலைக்காட்சிக்கு தாவிய இவர் மேலும் பிரபல்யம் அடைந்தார். கடந்து 2017 ஆம் ஆண்டு ஹுசேன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இருவரும் வெவ்வேறு மதத்தவர்கள் என்பதால் அந்த சமயத்தில் இவர்களுடைய திருமணம் இணையத்தில் பேசுபொருளாக மாறியது.
அதைடியெல்லாம் கடந்த தனது காதல் கணவருடன் மகிழ்சியாக வாழ்ந்து வருகின்றார். சில மாதங்களுகடகு முன்னர் இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சயில் பிரியங்கா உடன் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக நிகழ்ச்சியைவிட்டு வெளியேறியது இணையத்தில் புயலை கிளப்பியது.
அதனை அசால்ட்டாக சமாளித்து விஜய் தொலைக்காட்சியில் இருந்து வெளியேறிய பின்னர் ஜீ தமிழ் பக்கம் வந்துவிட்டார்.
தற்போது டான்ஸ் ஜோடி டான்ஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளினி என்பதையும் தாண்டி மணிமேகலையின் பங்கு அதிகமாகவே இருந்தது.
இந்நிலையில் தற்போது நிகழ்ச்சி பிரம்மாண்டமாக முடிவுக்கு வரவுள்ளது. இந்த சீசனின் கடைசி நாள் என ஒரு எமோஷ்னல் காணொளியை வெளியிட்டுள்ளார் மணிமேகலை. குறித்த காணொளி இணையத்தில் அசுர வேகத்தில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
