உயிரை மாய்த்துக் கொண்ட தாய்: தற்கொலைக்கு தயாரான வி.ஜே.கல்யாணி
விஜே கல்யாணியின் தாய் தற்கொலை செய்துக் கொண்ட பிறகு தானும் தற்கொலைக்கு தயாரானேன் என்ற ஒரு செய்தி தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது.
விஜே கல்யாணி
தமிழ் சினிமாவிற்கு ஜெயம் திரைப்படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகமானவர் தான் கல்யாணி. அதனைத் தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து 15 வயதில் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்தார்.
ஆனால் இவர் நடித்த திரைப்படங்கள் சரியாக போகவில்லை என்பதால் பிரிவோம் சந்திப்போம், தாயுமானவன், ஆண்டாள் அழகர், போன்ற சீரியல்களில் நடித்தார்.
அத்தோடு நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் மாறி படும் பிஸியாக இருந்தார். பின்னர் 2014ஆம் ஆண்டு ரோகித் என்பவரை திருமணம் செய்து அமெரிக்காவில் செட்டிலாகி விட்டார். இவருக்கு தற்போது 5 வயதில் ஒரு பெண் குழந்தையும் இருக்கிறார்.
தற்கொலைக்கு தயாரான கல்யாணி
இந்நிலையில், விஜே கல்யாணி தன் அம்மா குறித்து வருத்தமான தகவல்களை பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
அதில், அவர் கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் என் வாழ்க்கையில் இரண்டு ஆன்மாவை இழந்தேன். அது என் வாழ்வில் மிகவும் பயங்கரமான நாளாக மாறியது. நானும் என் அம்மாவும் ஒன்றாக வசித்து வந்த வேளையில், பக்கத்து அறையில் என் அம்மா இருநதார், நான் எப்போதும் போல ஜிம் செல்ல தயாராகிக் கொண்டிருந்தேன்.
அப்போது அம்மாவின் அறை கதவை தட்டி அவரைப் பார்க்கும் போது அவரின் முகத்தில் என்றுமில்லாத மகிழ்ச்சி அதில் ஏதோ ஒன்று தப்பாக இருப்பதாக உணர்ந்தேன். நான் அவருக்கு கொஞ்சம் எலுமிச்சை ஜூஸ் செய்து கொடுத்துவிட்டு சீக்கிரம் தயாராகுங்கள் என்று சொல்லிவிட்டு நான் ரெடியாகப் போனேன்.
அப்போது 20 நிமிடங்கள் கழித்து அம்மாவை கூப்பிட கதவை திறந்தேன். ஆனால் திறக்க முடியவில்லை. அதன் பிறகு கதவை உடைத்து பார்க்கும் போது என் அம்மா தூக்கில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது எனக்கு 23 வயது தான். அந்த நாள் என்னுடைய வாழ்க்கையை மாற்றி விட்டது.
என்னுடைய அம்மா எனக்கு சிறந்த தோழியாக இருந்தார்.அவர் இல்லாத உலகத்தை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.அன்றே என்னுடைய ஆன்மாவும் இறந்து விட்டது.
சில நாள் கழித்து அம்மாவின் டைரியை படித்த போது அவர் சோகமாக தான் இருந்திருக்கிறார் என்பதை உணர்ந்தேன். பிறகு தான் நானும் வாழ்க்கை மீது ஆசையில்லாமல் தற்கொலைக்கு முயன்றேன் என்று கூறியிருக்கிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |