பெண் தோழியுடன் நெருக்கமாக போட்டோவை வெளியிட்ட ஜாக்குலின்! நெட்டிசன்களின் ட்ரோலுக்கு பதிலடி
விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக தனது பயணத்தை துவங்கிவர் தான் ஜாக்குலின்.
இவர் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக்கொண்டிருக்கும் போதே படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்து சிறு சிறு கதாபாத்திரங்ககளில் நடித்து வந்த ஜாக்குலினுக்கு தேன்மொழி என்ற சீரியலில் நடித்து பெரும் பிரபலமானார்.
தற்போது டாம் பாய் லுக்கில் இருக்கும் தன் நெருங்கிய தோழி ஒருவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்ட ஜாக்குலினை நெட்டிசன்ஸ் கலாய்த்து தள்ளியுள்ளனர்.
அதில், அது பையனா இல்லை பொண்ணா? என்று தோற்றத்தை குறித்து கேலி செய்தது மட்டுமல்லாது. ஒஹ்... ஒருவேளை அப்படி இருக்குமோ என ஓரினசேர்க்கை என்று மறைமுகமாக கலாய்த்து தள்ள கொந்தளித்த ஜாக்குலின் வீடியோவில் பதிலடி கொடுத்துள்ளார்.