எதிர்பாராத ஏமாற்றத்துடன் எலிமினேட்டான ஜாக்குலின்.. செய்த முதல் வேலை- விமர்சிக்கும் இணையவாசிகள்
பிக்பாஸ் வீட்டில் இருந்து எதிர்பாராத விதமாக எலிமினேட்டான ஜாக்குலின் செய்த முதல் வேலை காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பிக்பாஸ் 8
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பாரிய வரவேற்பை பெற்று வருகின்றது.
இந்த நிகழ்ச்சி தன்னுடைய எட்டு சீசன்களை வெற்றிகரகமாக நிறைவு செய்துள்ளது. நேற்றைய தினம் எட்டாவது சீசனின் வெற்றியாளராக முத்துகுமரன் தெரிவு செய்யப்பட்டார்.
இவரை தொடர்ந்து சௌந்தர்யா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளதாக, மூன்றாவது இடத்தை விஷால் பிடித்துள்ளார். நான்காவது இடத்தை பவித்திரா , ஐந்தாது இடத்தை ரயானும் பிடித்துள்ளனர்.
செய்த முதல் வேலை
இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் Money Box டாஸ்க்கில் எதிர்பாராத விதமாக எலிமினேட் செய்யப்பட்ட ஜாக்குலின் செய்த முதல் வேலை காணொளி இணையவாசிகளின் கவனத்திற்கு சென்றுள்ளது.
அதாவது பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே சென்ற ஜாக்குலின் முதலில் அவருடைய தலைமுடியை சரிச் செய்வதற்கான சலூனுக்கு சென்றுள்ளார்.
“பிக்பாஸ் வீட்டில் அழுது புலம்பி அங்குள்ளவர்களை கவலையடைய செய்து விட்டு வெளியில் வந்தவர் தன்னை அழகு படுத்திக்கொள்கிறாரா?” என ரசிகர்களும் கருத்துக்களை பதிவு செய்து வந்தனர்.