சித்ரா தற்கொலையில் திடீர் திருப்பம்! கழுத்தில் கடிக்கப்பட்ட கொடுமை: வெளியிட்ட பரபரப்பு ஆதாரம்
நடிகை சித்ராவின் மரணம் குறித்து அவரது பெற்றோர்கள் தற்போது அளித்துள்ள ஆதாரங்கள் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
நடிகை சித்ரா
பிரபல சீரியல் நடிகை சித்ரா சென்னை நசரத்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் கடந்த 2020ஆம் ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் சித்ரா தற்கொலை செய்துகொள்ள அவரின் கணவர் மற்றும் தாய் கொடுத்த மனஅழுத்தமே காரணம் என காவல்துறையினர் தெரிவித்து இருந்தனர். தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அடுத்தடுத்து பொலிசார் நடத்திய விசாரணையில் சித்ராவின் கணவர் ஹேம்நாத் மதுபோதையில் படப்பிடிப்பு தளத்துக்குச் சென்று சித்ராவுடன் பிரச்னை செய்தது அம்பலமாகியுள்ளது.
சித்ராவின் செல்ஃபோனில் இருந்த SMS, புகைப்படங்கள், ஆடியோ போன்ற ஆதாரங்கள் அழிக்கப்பட்டது சந்தேகத்தை ஏற்படுத்தியது.
சடலமாக காணப்பட்ட குரங்கு! உயிர் கொடுக்க நடந்த போராட்டம்: நெகிழ வைக்கும் காட்சி
உயிருக்கு ஆபத்து என கூறிய ஹேம்நாத்
சமீபத்தில் சித்ரா வழக்கில் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும், தன்னையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டல் வருவதாகவும் சித்ராவின் கணவர் ஹேம்நாத் பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதன் பின்னர் சித்ராவின் கணவர் குறித்து அவரது நண்பர் பல ஆதாரங்களை வெளியே காட்டினார். அதில் போதை மாத்திரைகள், ஆணுறைகள் இருந்தது மட்டுமின்றி, ஹேம்நாத் பணத்திற்காக பெண்களை ஏமாற்றுபவர் என்று கூறியுள்ளார்.
சூரிய பெயர்ச்சியால் அரங்கேறும் அதிர்ஷ்டம்! இந்த ராசிகளின் தலைவிதி மாறப் போகிறதாம்
பல உண்மைகைளை உடைத்த சித்ராவின் பெற்றோர்
நேற்றைய தினத்தில் நேரலையில் செய்தியாளர்களை சந்தித்த பெற்றோர்கள் பல ஆதாரங்களை வெளியிட்டுள்ளனர். சித்ராவினைக் குறித்து தவறாக கருத்து வெளியிடுபவர்களுக்கு கோரிக்கை வைத்தனர்.
மேலும் தனது பெண் யாரையும் ஏமாற்றி எதுவும் சம்பாதிக்கவில்லை என்றும் நாங்கள் தற்போது கடனில் தான் இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.
சித்ராவின் மரணத்தில் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு உண்டு என்பது அவனுக்குதான் தெரியும் என அவரது பெற்றோர் பரபரப்பு புகார் அளித்தனர். இது பேசிய அவரது தாயார் வசந்தா, சித்ராவின் மரண வழக்கு நேர்மையாக நடைபெற முதல்வர் தலையிட வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.
சித்ராவின் முகம் கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் காயம் உள்ளது. இது திட்டமிட்ட கொலை எனவும், சித்ராவின் கழுத்தில் யாரோ கடித்தது போன்ற பல் பதிந்த காயம் உள்ளது என கூறியுள்ளதால், அவரது தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
சித்ராவின் கணவர் ஹேம்நாத்திற்கு நார்கோ டெஸ்ட் எடுக்க வேண்டும் என்றும் சித்ராவின் பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.