என் பேச்சை சித்ரா கேட்கவே இல்லை.. இறந்த பிறகு ஹேமந்த் என்ன செய்தார்! தாயார் ஆவேசம்
ஹேமந்த் தப்பிக்க பார்ப்பதாக விஜே சித்ராவின் தாயார் குற்றம்சாட்டியுள்ளார்.
சித்ரா மரணத்திற்கு காரணமானவர்களால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக சென்னை கமிஷனர் அலுவலகத்தில் ஹேமந்த் புகார் அளித்தார்.
இந்நிலையில் சித்ராவின் தாயார், ஹேமந்த் தப்பிக்க வழி பார்ப்பதாகவும் வழக்கு விசாரணையை திசை திருப்ப முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

சித்ராவுக்கு அரசியல்வாதி மகனின் தொல்லை இருக்கு என்பதை முன்பே கூறியிருக்க வேண்டியதுதானே என்று கேட்டுள்ள அவர் வழக்கை குழப்பி தப்பிக்க பார்க்கிறார் என்றும் தெரிவித்துள்ளார்.
ஹேமந்த் 2020ஆம் ஆண்டு டிசம்பர் 7 ஆம் தேதி என்னிடம் போனில் பேசியதுதான், அதன் பிறகு தன்னிடம் பேசவில்லை என்ற அவர் தவறு செய்யாவிட்டால் என்னிடம் பேச வேண்டியதுதானே என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
என் மகளை தேவதை போல் பார்த்து கொள்கிறேன் என்று கூறினார். ஆனால் இன்று 7 பேர் மிரட்டுவதாக கூறுகிறார். ஹேமந்த் பேச்சை நான் நம்பல, ஆரம்பத்திலேருந்து அவன் மீது எனக்கு நம்பிக்கையில்லை.
என் பேச்சை சித்ரா கேட்கவே இல்லை. சித்ராவை தனது மனைவி என்று சொல்லும் ஹேமந்த், அவர் இறந்த பிறகு ஒரு கணவராக அவருக்கு என்ன செய்தார்.
ஒரு சடங்கு கூட செய்யவில்லை, பிறகு எதற்கு மனைவி என்று கூற வேண்டும் என ஆவேசமாக பேசியுள்ளார் சித்ராவின் தாயார்.