சித்ரா இறப்புக்கு யார் காரணம் என தெரியும்? ஹேம் நாத்தின் பரபரப்பு பேட்டி!
சின்னத்திரை நடிகையான விஜே சித்ரா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கி இருந்தது.
காதல் கணவர் தான் கொலை செய்தார் என சித்ராவின் பெற்றோர்களும் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.
தொடர்ந்து சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக ஹேமந்த் கைது செய்யப்பட்டு இரண்டு மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர் ஜாமீனில் வெளிவந்த ஹேம் நாத், தனது உயிருக்கும் ஆபத்து இருப்பதால் பாதுகாப்பு கேட்டு சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இறப்புக்கு யார் காரணம்?
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஹேமந்த், சித்ரா மரணத்திற்கு பின்னால் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஒருவர் இருப்பதாகவும் போலீஸ் விசாரணையில் அனைத்தையும் சொல்ல தயாராக இருப்பதாகவும் கூறினார்.
இதனால் சித்ரா வழக்கு மீண்டும் சூடுபிடித்துள்ளது. தற்போது ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த ஹேம் நாத், ஹோட்டல் அறைக்கு வந்ததாகவும் கூறியுள்ளார். வந்ததில் இருந்தே ஷாக்காகவே இருந்தார், ஏதோ ஒரு யோசனையில் இருந்தார் என்றும் ரோட்டையே வெறித்து பார்த்தார் என்றும் கூறியுள்ளார்.
சில அரசியல் பிரமுகர்களால் ஏற்பட்ட பிரச்சனைகளை கூறிய சித்ரா அன்று இரவும் அறைக்கு வந்த பிறகு அதைப்பற்றி பேசி வருத்தப்பட்டுள்ளாராம்.
மேலும், சித்ரா இறப்புக்கு காரணமாக இருந்தது அரசியல்வாதிகள், மீடியா மற்றும் ஈவன்ட்ஸ் நடத்துபவர்கள் என்று கூறியுள்ள ஹேம் நாத்.. உரிய பாதுகாப்பு கிடைத்தவுடன் அவர்கள் யார் என கூறுவேன் என தெரிவித்துள்ளார்.