அர்ச்சனா அம்மா கொண்டாடிய கடைசி பிறந்தநாள்- காணொளியை பார்த்து கலங்கிய ரசிகர்கள்
பிரபல தொகுப்பாளினி அர்ச்சனா அம்மா இறப்பதற்கு முன்னர் குடும்பத்தினருடன் கடைசியாக கொண்டாடிய பிறந்த நாள் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
அர்ச்சனா
தமிழ் சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளினியாக அர்ச்சனா வலம் வருகிறார்.
பல தமிழ் நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களில் நடித்துள்ள இவர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராகவும் பங்கேற்றுள்ளார்.
விஜே அர்ச்சனா நிகழ்ச்சியில் தனது பங்கேற்பிருக்காக அதிக அங்கீகாரத்தைப் பெற்றார். “என் வழி தனி வழி” என்ற படத்தின் மூலம் நடிகையாக அறியப்பட்டார்.
இதனை தொடர்ந்து, தொகுப்பாளினி அர்ச்சனா சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படத்தில் தனது மகளுடன் இணைந்து நடித்திருந்தார். அத்துடன் நான் சிரித்தால் படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி, ஐஸ்வர்யா மேனன் ஆகியோருடன் நடித்திருந்தார்.
குடும்பம்
இப்படி தனி பெண்ணாக சாதித்த அர்ச்சனா கடந்த 2004-ம் ஆண்டு வினீத் முத்துக்கிருஷ்ணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜாரா வினீத் என்ற பெண் குழந்தையும் உள்ளது.
தனது இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்ட்டிவாக இருப்பதோடு, தனது வாழ்க்கையைப் பற்றி ரசிகர்களுக்கு அப்டேட் செய்து வருகிறார்.
மேலும் தன்னை போலவே தனது மகளையும் தொகுப்பாளினியாக மாற்றியுள்ள அர்ச்சனா, அவருடன் இணைந்து ஜீ தமிழின் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
கடைசியாக அம்மா கொண்டாடிய பிறந்த நாள்
இந்த நிலையில், அர்ச்சனாவின் தாயார் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இவ்வுலகை விட்டு பிரிந்துள்ளார்.
இதனை கேட்ட பிரபலங்கள், இணையவாசிகள் மற்றும் ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வந்தனர்.
மேலும், மருத்துவமனையில் அம்மா பிறந்த நாளுக்கு அர்ச்சனா சகோதரி கேக் வெட்டி கொண்டாடிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |