வெறும் 10000 ஆயிரத்திற்கு குறைந்த Vivo மொபைல்... அதிரடி ஆஃபர் இதோ
ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தங்களது ஸ்மார்ட்போன்களின் மொடல்களை அதிரடியாக விலை குறைத்து வருவது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வகையில் Vivo நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களை அதிரடியாக விலை குறைப்பு செய்துள்ளது.
Vivo Y16, Vivo Y17s, Vivo Y02t, Vivo Y02, Vivo Y27 மற்றும் Vivo YY17s போன்ற மாடல்களின் விலைகள் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.
தற்போதைய விலை குறைப்பு காரணமாக இந்த ஸ்மார்ட்போன்களின் விலை ரூ. 1000 குறைந்திருக்கிறது. விலை குறைப்பு ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் அமலுக்கு வந்துள்ளது.
விலை குறைப்பு மட்டுமின்றி ஸ்மார்ட்போன்களை வாங்குபவர்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுவதுடன், சில வங்கிக் கார்டுகளை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.1000 வரை கேஷ்பேக்கும் வழங்கப்படுகின்றது.
புதிய விலை விவரங்கள்:
Vivo Y16 (4ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி) ரூ. 9 ஆயிரத்து 999
Vivo Y17s (4ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி) ரூ. 11 ஆயிரத்து 499
Vivo Y17s (4ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி) ரூ. 10 ஆயிரத்து 499
Vivo Y27 (6ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி) ரூ. 12 ஆயிரத்து 999
Vivo Y02 (3ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி) ரூ. 7 ஆயிரத்து 999
Vivo Y02t ரூ. 8 ஆயிரத்து 499
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |