நிறம் மாறும் 5ஜி ஸ்மார்ட் போன்... Vivo-வின் அசத்தலான ஆஃபர்
வண்ணத்தை மாற்றும் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் குறைவாக உள்ள நிலையில், இதில் ஒன்றாக Vivo V25 5G காணப்படுகின்றது. சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஸ்மார்ட் போனை தள்ளுபடி விலையில் வாடிக்கையாளர்கள் வாங்கிச் செல்லும் வசதி உள்ளது.
நிறத்தை மாற்றிக் கொள்வது மட்டுமின்றி இதில் பல சிறப்பம்சம் உள்ளது. அனை என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
Vivo V25 5G அம்சங்கள்
இந்த Vivo V25 5G ஸ்மார்ட்போனில், வாடிக்கையாளர்களுக்கு 6.44-இன்ச் AMOLED FHD + டிஸ்ப்ளே காணப்படுகின்றது. இது 90Hz-ன் புதுப்பிப்பு வீதத்தையும் 180Hz தொடு மாதிரி வீதத்திற்கும் பயனாக இருக்கின்றது.
நிறத்தை மாற்றும் Fluorite Ag Glass தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ள நிலையில், பின்புறத்தில் பேனலில் சூரிய ஒளி அல்லது UV கதிர்கள் வெளிப்படும் போது நிறத்தை மாற்ற அனுமதிக்கிறது.
அதிநவீன செல்ஃபி கமெராக்கள், 50MP மேம்பட்ட ஆட்டோஃபோகஸ் தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது.
Vivo V25 5G ஆனது OIS+EIS நிலைப்படுத்தலுடன் 64MP முதன்மை சென்சார் கொண்டுள்ளது. மேலும் 8MP வைட் ஆங்கிள் மற்றும் 2MP மைக்ரோ சென்சார் வழங்கப்பட்டுள்ளது.
5G இயங்கு தளத்தின் ஆற்றலைக் கொண்டுள்ள இதில் 8GP வரை கூடுதல் ரேம் வழங்கப்படுகின்றது. 44W வேகமாக சார்ஜ் செய்யும் வசதியுடன், 4500mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு OS12 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது.
சலுகை என்ன?
பிளிப்கார்டில் இந்த போன் 32999 ரூபாய்க்கு கிடைக்கின்றது. 15 விழுக்காடு தள்ளுடியுடன் 25 ஆயிரத்து 280 ரூபாய்க்கு வாங்கலாம்.
இது மட்டுமில்லாமல் எக்ஸ்சேஞ்ச் தள்ளுடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இருக்கும் பட்சத்தில் இந்த ஸ்மார்ட் போனின் விலை இன்னும் குறையும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |