விரைவில் அறிமுகமாகும் Vivo T4 Ultra ஸ்மார்ட்போன்! இதன் அம்சங்கள் என்ன தெரியுமா?
புதிய மொபைல் போன் வாங்குவதற்கு வாடிக்கையாாளர்களுக்கு Vivo T4 Ultra போன் விரைவில் அறிமுகமாக உள்ளது.
Vivo T4 Ultra போன் ஜுன் 11ம் தேதி அறிமுகமாக உள்ள நிலையில், இதன் தனித்தன்மைகள் மொபைல் பிரியர்களை வாயடைக்க வைத்துள்ளது.
Vivo T4 Ultra போன்
Vivo-வின் புதிய மொபைலான Vivo T4 Ultra விரைவில் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. இந்த போன் பல அற்புதமான அம்சங்களை கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Vivo T4 Ultra, நிறுவனத்தின் T4 வரிசையின் மூன்றாவது போனாக வரவுள்ளது. இந்த மொபைல் ஜூன் 11, 2025 அன்று மதியம் 12 மணிக்கு இந்தியாவில் அறிமுகமாகும் என்று அறிவித்துள்ளது.
இந்த ஸ்மார்ட் போனை, ஈ-காமர்ஸ் தளமான Flipkart-ல் இதை பெற்றுக்கொள்ளலாம்.
அம்சங்கள் என்ன?
Vivo T4 Ultra ஸ்மார்ட்போனின் கேமராவானது 50 மெகாபிக்சல் முதன்மை லென்ஸ், 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் சென்சார் மற்றும் மற்றொரு 50 மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ சென்சார் கொண்ட டிரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.
செல்ஃபி பிரியர்களுக்காக, இந்த ஸ்மார்ட்போன் ஒரு அற்புதமான 50 மெகாபிக்சல் முன் கேமராவைக் கொண்டுள்ளது.
50MP செல்ஃபி கேமரா, 7000mAh பேட்டரி, சூப்பர் OLED டிஸ்ப்ளே மற்றும் Dimensity 9300+ சிப்செட் உடன் வருகிறது. Flipkart இல் கிடைக்கும்.
மேலும் கவர்ச்சிகரமான 6.78-இன்ச் வளைந்த OLED டிஸ்ப்ளேவை 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் மற்றும் 5000 nits உச்ச பிரகாசத்துடன் கொண்டிருக்கும்.
MediaTek Dimensity 9300+ சிப்செட் மூலம் இயக்கப்படும் இந்த சாதனம், மல்டி டாஸ்கிங் மற்றும் அன்றாட பயன்பாட்டிற்கு சிறந்த செயல்திறனை உறுதியளிக்கிறது.
இதன் பேட்டரியானது 7000mAh, 90W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது. இவை ஆண்ட்ராய்டு 15ல் இயங்குகின்றது.
இதன் விலை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்றாலும், சுமார் 35,000த்திற்கு அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |