கடைசியா நடிகர் விவேக் சாப்பிட்ட சாப்பாடு என்ன தெரியுமா? அவருக்கு எந்த நோயும் இல்லை : சமையல் பெண்மணி தகவல்
நடிகர் விவேக்கின் மறைவை அடுத்து, அவருடைய வீட்டு சமையல் பெண்மணி சாந்தி பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளார்.
அதில், “விவேக் சார் ரொம்ப நல்ல மனுஷன். என் சமையல் சாருக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. அவரு மனைவி சமைப்பது போல் நான் சமைப்பதாக என்னிடம் கூறியிருந்தார்.
அவருக்கு எந்த நோயும் இல்லை. ஆக்டிவா இருந்தாங்க. வாழக்காய், சேப்பங்கிழங்கு என எல்லாமே அவருக்கு பிடிக்கும். அவருக்கு டிபன் தான் நான் செஞ்சு கொடுத்திருக்கேன்.
முட்டை விரும்பி சாப்டுவார். அன்னைக்கு கூட என் கையால் முட்டை வாங்கி சாப்பிட்டார். நல்லாருக்கு என்றும் கூறினார்.
மேம் ரொம்ப நல்லவங்க. அவங்களுக்கு தைரியம் கொடுக்கிறேன். சாரு தங்கமானவர். அதில் இருந்து நான் இன்னும் மீண்டு வரல.” என அப்பெண்மணி குறிப்பிட்டுள்ளார்.
