நடிகர் விவேக் மரணத்தில் ஒளிந்திருக்கும் மர்மம்... விசாரணைக்கு ஏற்றது மனித உரிமை ஆணையம்!
தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகரான விவேக் ஏப்ரல் மாதம் 17 ம் தேதி திடீர் மாரடைப்பு காரணமாக காலமானார்.
அவரது இந்த திடீர் மரணம், அவரது ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகையே அதிர்ச்சி அடைய வைத்தது.
மேலும், இறப்பதற்கு இரண்டு நாட்கள் முன்னர்தான் அவர் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டு மக்களுக்கிடையில் அதற்கான விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார்.
அடுத்த நாள் மாரடைப்பு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விவேக், அதற்கு அடுத்த நாள், ஏப்ரல் 17 அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
அவர் மாரடைப்பால் மரணமடைந்தார் எனக் கூறப்படாலும் தடுப்பூசி போட்டுக்கொண்டதே விவேக் மரணத்திற்கு காரணம் எனக் கூறப்பட்டது.
இந்நிலையில், விழுப்புரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன், கொரோனா தடுப்பு ஊசி செலுத்தியதால் விவேக் மரணமடைந்ததாக புகார் தெரிவித்தார்.
இதனால், இந்த புகாரை தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.