வைட்டமின் D சப்ளிமெண்ட் எடுத்து கொள்பவரா? அப்போ இந்த விடயத்தில் ஜாக்கிரதை
பொதுவாக மற்ற வைட்டமின்களை விட வைட்டமின் D கொழுப்பில் கரையக்கூடியதாக பார்க்கப்படுகின்றது. இது உடலில் சேமிக்கப்பட்டு, அதன் பின்னர் செயற்படும் வைட்டமினாகும்.
சிலர் வைட்டமின் D பற்றாக்குறை ஏற்படும் போது அதனை சப்ளிமெண்ட்டாக எடுத்து கொள்வார்கள்.
இந்த சப்ளிமெண்ட் எடுப்பதற்கு முன்னர் நமது உடலில் எவ்வளவு வைட்டமின் D உள்ளது என்பதனை சரியாக பரிசோதனை செய்த பின்னரே எடுத்து கொள்ள வேண்டும்.
அந்த வகையில், வைட்டமின் D சப்ளிமெண்ட்டுகளை எடுத்து கொள்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள் குறித்து தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
வைட்டமின் D குறைபாடு இருக்கா?
1. உடலில் போதுமான அளவு வைட்டமின் D இல்லாத போது அதனை சரி செய்து கொள்வதற்காக சப்ளிமெண்ட்களை எடுத்து கொள்கிறோம். மாறாக முறையாக பரிசோதிக்காமல் எடுத்து கொண்டால் உடலில் நச்சுத்தன்மை உருவாகிறது. இவை உடலில் இருந்து வெளியேற்றம் அடையாது. இதனை போல் வைட்டமின்கள் ஏ, ஈ மற்றும் கே ஆகியவைகளும் பார்க்கப்படுகின்றது. வைட்டமின் குறைபாடு ஏற்பட்டால் மாத்திரமே சப்ளிமெண்ட்ஸ் எடுத்து கொள்ளலாம்.
2. வைட்டமின் D பற்றாக்குறை ஏற்பட்டால் உடலில் உள்ள பலவீனமான எலும்புகள், எலும்பு வலி மற்றும் தசை பலவீனத்தை ஏற்படுத்தும். இதனால் வைட்டமின் D குறைபாட்டை முடிந்தவரை நிவர்த்தி செய்ய வேண்டும்.
3. 10 வயது முதல் 75 வயது வரையுள்ள பலர் வைட்டமின் D குறைபாட்டுடன் போராடி வருகின்றனர். அவர்களுக்கு D3 சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொள்ளுமாறு மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றார்கள். சோதனை இல்லாமல் எந்த ஒரு சப்ளிமெண்ட்டுகளையும் எடுப்பதனை தவிர்க்க வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |