மழைக்காலத்தில் தலைமுடியில் கெட்ட வாசனை வருகின்றதா? சுலபமான டிப்ஸ் இதோ
மழைக்காலத்தில் தலைமுடியில் ஏற்படும் துர்நாற்றத்தை எவ்வாறு தடுக்கலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
மழைக்காலத்தில் அதிகமாக ஈரப்பதம் இருப்பதால் சரும மற்றும் தலைமுடியில் மாற்றங்கள் ஏற்படும். குறிப்பாக தலைமுடி பிசுபிசுப்பாகவும், எண்ணெய் பசையாகவும் இருக்கும்.
மேலும் துர்நாற்றம் வீசவும் ஆரம்பிக்கும். இதனை மிகவும் சுலபமாக கட்டுப்படுத்த சில டிப்ஸ் இதோ.
துர்நாற்றத்தை போக்க சில டிப்ஸ்
வெந்தயம் மற்றும் கற்றாழை ஜெல் பெரிதும் உதவியாக இருக்கின்றது. வெந்தயம் தலைமுடியை சுத்தம் செய்யவும், நோய் தொற்றை குறைக்கவும் செய்கின்றது. 3 ஸ்பூன் வெந்தயம் மற்றும் சிறிதளவு கற்றாழை ஜெல்லை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து, அந்த பேஸ்ட்டை தலையில் தடவி சுமார் 10 நிமிடம் கழித்து குளிக்கவும்.
மழைக்காலத்தில் கூந்தலிலிருந்து வரும் துர்நாற்றத்தை நீக்க துளசி நீரை பயன்படுத்தவும். துளசி நீரில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளதால், தொற்று நோயை நீக்குகின்றது. தண்ணீரில் துளசி இலைகளை போட்டு மிதமாக சூடு செய்து குளிக்கவும்.
எலுமிச்சை சாறு தலையில் துர்நாற்றத்தை போக்குகின்றது. அதாவது ஷாம்பு போட்டு குளித்த பின்பு எலுமிச்சை தண்ணீரை தலைக்கு பயன்படுத்த வேண்டும்.
தயிருடன் புதினா இலையை சேர்த்து அரைத்து, முடியில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து குளிக்கவும். இதனால் துர்நாற்றம் நீங்குவதுடன், முடி உதிர்வும் குறைகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |