Vitamin D: என்பு பகுதியை பாதிக்கும் வைட்டமின் டி குறைபாட்டின் அறிகுறி என்ன?
தற்காலத்தில் எவ்வித உடல் உழைப்பும் இன்றி ஏசி ரூம் மற்றும் பேன்களுக்கு அடியில் உட்கார்ந்து வேலைப்பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. இதனால் தான் பல உடல் நலப்பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமாக அமைகிறது.
குறிப்பாக மக்கள் பலரும் சந்திக்கக்கூடிய பிரச்சனைகளில் உள்ள வைட்டமின் டி குறைபாடு என்னென்ன பாதிப்புகளைத் தரக்கூடும் என்பது பற்றிய முழு விபரங்கள் இங்கே.
வைட்டமின் டி
நமது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு தேவைப்படும் மிக முக்கியமான வைட்டமின்களில் ஒன்று தான் வைட்டமின் டி. இது சராசரியாக ஒருவருக்கு குறைந்தது 30 நானோகிராம் அளவிற்கு இருக்க வேண்டும்.
அதற்கும் கீழ் குறைவதைத் தான் வைட்டமின் டி குறைபாடு பாதிப்பு என்கிறோம். இவற்றை உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றத்தின் மூலம் சரி செய்ய முடியும்.
அதே நேரம் 20 நானோகிராம் வரை வைட்டமின் டி குறைாபடு ஏற்படும் பட்சத்தில், முறையான சிகிச்சை அளிக்க வேண்டும். இந்த பாதிப்பை சரிசெய்யாவிட்டால் சர்க்கரை நோய் , எலும்பு அழற்சி, தசை வலுவிழப்பு, தசைவலி, மற்றும் சுவாசம் தொடர்பான தொடர்பான பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.
வைட்டமின் டி குறைபாட்டின் அறிகுறிகள்
சோர்வு, பலவீனம், நோய் எதிர்ப்பு குறைபாட்டின் காரணாக அடிக்கடி நோய் வாய்ப்படுதல், மூட்டு வலி, எலும்பு பலவீனமாகுதல் போன்ற அறிகுறிகள் உங்களுக்கு ஏற்பட்டால் வைட்டமின் டி குறைபாடு உள்ளது என்று அர்த்தம்.
குறிப்பாக பெண்களுக்கு உடல் மற்றும் மனச்சோர்வு, உறக்கமின்மை, எலும்பு வலி, முடி கொட்டுதல், தசை பலவீனம், பசியிழப்பு, எளிதில் நோய் வாய்ப்படுதல் போன்ற பல்வேறு பாதிப்புகள் ஏற்படும்.
இதில் பலருக்கு உள்ள பிரச்சனைகளில் ஒன்றாக இருப்பது தூக்கமின்மை.இது கால்சிஃபெரால் – வைட்டமின் டி – குறைவாக இருந்தால் உங்கள் தூக்கம் பாதிக்கப்படும்.
இது எப்படி ஏற்படுகிறது என்றால், வைட்டமின் டி குறைவதன் காரணமாக மன அழுத்த ஹார்மோன் அல்லது கார்டிசோல் அதிகரிக்கிறது. இதன் காரணமாக அதிகமான சோர்வு ஏற்படுகிறது.
இதனால் நம் தூக்கம் பாதிக்கிறது. நம் எலும்புகளில் அடிக்கடி வலியும் ஏற்படும். தசைகள் பலவீனமாகும். எலும்பின் அடர்த்தி குறைந்து எலும்பு முறிவு ஏற்படும். எலும்புகள் வலுவில்லாத காரணத்தால் அடிக்கடி கிழே விழுவீர்கள்.
ஒருவருக்கு அடிக்கடி உடல் நலத்தில் பிரச்சனை இருந்தால் அது இந்த குறைபாட்டிற்கான அறிகுறியாகும். இதுபோன்ற அறிகுறி இருந்தால் அது வைட்டமின் டி குறைபாடாகும்.
சிகிச்சை முறை
சூரிய ஒளியின் வெளிச்சத்தால் உடலுக்கு பாதிப்புகள் ஏற்படும் என்று சன்ஸ்கிரீன் லோஷன் மற்றும் கிரீம்களை பெண்கள் பயன்படுத்துகின்றனர். இது சூரிய ஒளியின் தாக்கத்திலிருந்து காத்துக்கொள்வதற்கு உதவுகிறது என்றாலும் வைட்டமின் டி யை நீங்கள் பெற முடியாது.
இந்த குறைபாடு உள்ளவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது. நோயின்றி வாழ்வதற்கு உடல் உழைப்பும் கொஞ்சம் அவசியம். அதற்கேற்ற சூழல் அமையவில்லை என்றாலும் நீங்கள் உங்களால் முடிந்தவரை சில உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
இதை தவிர பால், முட்டை, காய்கறிகள்,காளான், மீன் போன்ற ஊட்டச்சத்துள்ள உணவுகளையும் உங்களது உணவு முறையில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
சிலர் இதற்காக வைட்டமின் டி குறைபாட்டிற்கான மாத்திரைகள் எடுத்துக்கொள்வீர்கள் ஆனால் இதை அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது. இதனால் இதய பாதிப்பு, சிறுநீரக செயலிழப்பு போன்ற பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த வைட்டமின் டி குறைபாட்டின் சிகிச்சை
இந்த வைட்டமின் டி குறைபாட்டிற்கு நாம் சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும் என்றால் அது உணவு சப்ளிமென்ட் போன்றவற்றால் மட்டுமே முடியும். மற்றும் சூரிய ஒளி வெளிப்பாட்டின் மூலம் பெறுவதுமே இந்த குறைபாட்டிற்கான சிகிச்சையாகும்.
நீங்கள் அதிக நேரம் வெயிலில் போகாமல் இருந்தாலோ அல்லது எப்போதும் உங்கள் சருமத்தை மறைப்பதில் கவனமாக இருந்தாலோ உடலில் வைட்டமின் டி குறையும். வைட்டமின் அதிகம் கொண்ட உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
மேக்கரெல் அல்லது சால்மன் போன்ற எண்ணெய் மீன்கள் மாட்டிறைச்சி கல்லீரல் சீஸ் காளான்கள் முட்டையின் மஞ்சள் கரு சில காலை உணவு சீரியல்கள், ஆரஞ்சு சாறு, பால், சோயா பானங்கள் மற்றும் வெண்ணெ போன்ற செறிவூட்டப்பட்ட உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |