மெட்டி ஒலி செல்வம் ஞாபகம் இருக்கா? இப்ப என்ன தொழில் செய்கிறார் தெரியுமா? மனைவியுடன் வைரல் புகைப்படம்
சன் டிவி-யில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியலை யாராலும் மறக்க முடியாது. அதில் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரங்களும் இன்றும் மக்கள் மனதில் அழமாக பதிந்திருக்கிறார்கள்.
அதில் முக்கியமானவர் செல்வம் என்ற கதாபாத்திரத்தில் நடித்த விஸ்வா என்கிற விஸ்வநாதன்.
தற்போது அவர் என்ன செய்துக் கொண்டிருக்கிறார் தெரியுமா? தொலைக்காட்சியில் ரசிகர்களை பெரிதும் கவந்தது சீரியல்கள் என நிச்சயம் சொல்லலாம்.
குறிப்பாக பெண்கள் மத்தியில் தொலைக்காட்சி தொடர்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன.

திரையரங்கிற்கு சென்று சினிமா பார்க்காத பெண்கள் இருக்கலாம், ஆனால் டிவி-யில் சீரியல் பார்க்காத பெண்கள் இருக்கவே முடியாது. அந்த வகையில் சன் டிவி-யில் ஒளிபரப்பான சீரியல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றன.
அதில் முக்கியமான ஒன்று ‘மெட்டி ஒலி’ சீரியல். இதில் செல்வம் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் விஸ்வா. இவரது உண்மையான பெயர் விஸ்வநாதன்.
கல்லூரி படிப்பினை முடித்ததும் சின்ன சின்ன நாடகங்களில் நடித்து வந்தார். அதன் மூலம் தான் சன் டிவி-யில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அதன் மூலம் மக்கள் மனதில் தனக்கென ஓரிடத்தைப் பிடித்தார். இதையடுத்து கடந்த 2010-ம் ஆண்டு சென்னையை சேர்ந்த தொழிலதிபரின் மகளை திருமணம் செய்துக் கொண்டார் விஸ்வா. தற்போது இவர்களுக்கு 14 வயதில் ஒரு மகன் இருக்கிறார்.
மெட்டி ஒலி சீரியலுக்கு பின் சிறிது இடைவெளி எடுத்துக் கொண்ட விஸ்வா, மீண்டும் சன் டிவி-யில் ஒளிபரப்பான பொன்னூஞ்சல் சீரியலில் நடித்தார்.
அதன் பிறகு ஒரு சில படங்களிலும் நடித்தார். தொடர்ந்து விஸ்வா எதிர்பார்த்த அளவிற்கு சினிமா வாய்ப்புகள் கிடைக்காததால் மிகுந்த வருத்தத்தில் இருந்ததாக ஒரு நேர்க்காணலில் குறிப்பிட்டிருந்தார்.