திருமணத்திற்கு பின்பு தாறுமாறான காணொளியை வெளியிடும் விஷ்ணு விஷால்... இப்போ என்ன காட்சி தெரியுமா?
சில தினங்களுக்கு முன்பு கப்பிங் தெரபி சிகிச்சையினை மேற்கொண்ட நடிகர் விஷ்ணு விஷால் தற்போது ஐஸ் பாத் செய்யும் காணொளியினை வெளியிட்டுள்ளார்.
நடிகர் மட்டுமின்றி சிறந்த கிரிக்கெட் வீரராகவும் வலம் வரும் இவர், கடந்த சில ஆண்டுகளாக அதிகமான பிசிக்கல் மற்றும் மெண்டல் சேலஞ்சினை எதிர்கொண்டு வருகின்றார்.
சமீபத்தில் பாட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா ஹட்டாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு விஷ்ணு விஷால் வெளியிடும் ஃபோட்டோஷுட் ஃபோட்டோக்கள் ஆகட்டும், தெரபி ஃபோட்டோ ஆகட்டும் அனைத்தும் தாறுமாறாக வைரலாகி வருகின்றன.
சில நாட்களுக்கு முன்பு பண்டைய கால சிகிச்சை முறையான கப்பிங் தெரபி என்ற சிகிச்சையின் புகைப்படத்தை வெளியிட்டு ஆச்சரியப்படுத்தினார். தற்போது பெரிய சைஸ் ஐஸ் கட்டியுடன் பாத் எடுக்கும் விஷ்ணு விஷாலின் வீடியோ வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.
[D5TMON[