1300 ஆண்டுகளாக நீரில் மிதக்கும் விஷ்ணு சிலை! மர்மங்களுக்கான பின்னணி அம்பலம்.... இதோ ஆதாரம்!
நாம் வாழும் இந்த பூமியில் அதிசயங்களுக்கும், மர்மங்களுக்கும் பற்றாக்குறையே இல்லை.
நேபால் தலைநகர் காட்மாண்டுவில் இருந்து கிட்டத்தட்ட 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது புத்தானிகந்தா கோவில்.
இந்த கோவிலில் உள்ள விஷ்ணு சிலை ஆதிசேஷன் மேல் படுத்துக்கொண்டிருப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் என்ன ஆச்சர்யம் என்றால், கிட்டதட்ட 14 அடியில் உயரத்தில் மிகவும் பிரமாண்டமாக ஒரே கல்லால் செய்யப்பட்டுள்ள இந்த சிலை எப்படி இவளவு வருடங்களாக நீரில் மிதந்தபடியே இருக்கின்றது.
பொதுவாக பாற்கடலில் பள்ளிகொண்டிருப்பது போன்ற விஷ்ணு சிலைகளையும் படங்களையும் நாம் பார்த்திருப்போம்.

அனால் மனிதர்களை போல் மல்லாக்க படுத்துக்கொண்டு 13 நூற்றாண்டுகளாக நீரில் மிதந்துகொண்டிருக்கிறது பெருமாள் சிலை.
7 ஆம் நூற்றாண்டில் இந்த பகுதியை ஆண்ட விஷ்ணு குப்தா என்ற மன்னன் இந்த சிலையை நிறுவியதாக வரலாறு கூறுகிறது. இந்த சிலை மிதந்தபடியே இருந்தாலும் இதற்கான அர்ச்சனைகளும் அபிஷேகங்களும் தினமும் நடந்தவண்ணமே உள்ளன.
உண்மையில் சிலை மிதக்கின்றதா? அம்பலமான ரசியம்
இவர்கள் குறிப்பிடுவது போல உண்மையிலேயே நேபாளத்தில் நீரில் விஷ்ணு சிலை மிதக்க வில்லை.
அது தரையில் இருந்து சில அடி உயரமுள்ள பாம்பு போன்ற பீடத்தின் மீதுதான் அமைக்கப்பட்டுள்ளது. அந்த குளத்தில் 2, 3 அடி உயரத்தில் நீர் நிரப்பினால், சிலை பார்ப்பதற்கு மிதப்பது போலத் தெரியும்.
இந்த உண்மை வெளியில் தெரியாமல் இருக்க, குறிப்பிட்ட சிலையை விதவிதமான அலங்காரங்களால் ஜோடிப்பதும் வழக்கம். மிகச்சிறிய அந்த குளத்தில் உள்ள நீரை வடித்துவிட்டு, சில நாட்களில் பூஜை நடத்துவதும் உண்டு. அப்படியான புகைப்பட ஆதாரம் கீழே தரப்பட்டுள்ளது.
பார்ப்பதற்கு மிதப்பது போல தெரிவதால்... விஸ்னு சிலை மிதப்பதாகவே கருதுகின்றனர்.
