மாயா - பூர்ணிமா கூட்டணியால் மீண்டும் கடுப்பான அர்ச்சனா.. ஆதவராக நிற்கும் விஷ்ணு
மாயா - பூர்ணிமா கூட்டணியால் மீண்டும் கடுப்பான அர்ச்சனா கத்தும் வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பிக்பாஸ் 7
நாம் அனைவரும் பெரும் எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த பிக்பாஸ் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி பிரமாண்டமாக ஆரம்பமானது.
இந்த சீசனில் கூல் சுரேஷ், பவா, சரவண விக்ரம்,விசித்ரா, நிக்ஸன், ஐஷூ, விஜய் வர்மா, அனன்யா ராவ், யுகேந்திரன், பிரதீப், விஷ்ணு, பூர்ணிமா, மாயா, ஜோவிகா, மணி, ரவீனா, அக்ஷயா, வினுஷா ஆகிய 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
கடந்த ஆறு சீசன்களை வெற்றிக்கரமாக நிறைவு செய்த பிக்பாஸ் இந்த சீசனில் இரண்டு வீடு எனக் கூறி போட்டியாளர்களுக்கு டுவிஸ்ட் கொடுத்துள்ளது.
இதனை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சி 60 நாட்களை கடந்து விட்ட காரணத்தினால் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றது.
கடுப்பான அர்ச்சனா
இந்த நிலையில் மாயா - பூர்ணிமா இருவரும் ரவீனாவின் கைகளை இறக்கி விட்டு அவரை விளையாட விடாமல் கட்டுப்படுத்துவதாக அர்ச்சனா கடுப்பாகியுள்ளார்.
இது தொடர்பில் பூர்ணிமாவிடம் கேட்ட போது, “ நாங்கள் விளையாடினோம்..” என ஆங்கிலத்தில் பதில் கொடுத்துள்ளார். ஆனால் அவர்களை வேண்டும் என்று தான் ரவீனாவை விளையாட விடாமல் செய்கிறார் என அர்ச்சனா கூறுகிறார்.
இதற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமான விஷ்ணு மற்றும் தினேஷ் ஆகிய இருவரும் அர்ச்சனாவிடம் கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த காட்சி சமூகு வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், “ அர்ச்சனா சொல்வது சரி தான்..” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |