திருமணம் குறித்து மனம் திறந்த பிரபல நடிகர்! திரைக்கு வந்த சில உண்மைகள்
பிரபல நடிகர் விஷால் தன்னுடைய திருமணம் குறித்து பல அறியாத உண்மைகளை மறந்து பேசியுள்ளார்.
திருமண நிச்சயதார்த்தம்
தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகரான விஷால் தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் பல கோடி ரசிகர்களை தன்வசப்படுத்தி வைத்துள்ளார்.
மேலும் இவரின் படங்கள் சமூகத்திற்கு ஏதோவொரு கருத்தை தெரிவிக்கும் விதமாகவே காணப்படுகிறது.
இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்யப்போவதாக அவருடைய காதலியுடன் சேர்ந்த புகைப்படமொன்றை வெளியிட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து சில மாதங்களிலே இவரின் திருமண வாழ்கை ஆரம்பிக்கும் முன்னர் நின்று விட்டதாக தகவல் கசிந்தது.
காதல் சர்ச்சை
மேலும் கடந்த மாதம் இவர் ஒரு வாய் பேச முடியாத நடிகையுடன் இருப்பதாகவும் விரைவில் திருமணம் செய்யப்போவதாகவும் தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால் சில தினங்களில் அந்த பூஜை பட நடிகை, நானும் விஷாலும் ஒரு படம் சேர்ந்து நடிப்பதாகவும் எங்களுக்குள் எந்த உறவும் இல்லையென்றும் தெரிவத்திருந்தார். இதனுடன் இந்த பேச்சிவார்த்தை முற்றுப் பெற்றது.
திருமணம் குறித்து அப்பட்டமான உண்மைகள்
இந்நிலையில் சமிபத்தில் பேட்டியொன்றில் திருமணம் குறித்து மனம் திறந்து தன்னுடைய கவலைகளை கொட்டியுள்ளார்.
இதன்போது அவர் பேசிய விடயங்கள், “ என்னுடைய திருமண நிச்சயதார்த்தம் நடந்த 2019-ஆம் ஆண்டு முற்றுப் பெற்றது. இதனால் அந்த ஆண்டை நான் மறக்கமாட்டேன். எனது திருமணம் எனக்கு மிகவும் வருத்ததை கொடுத்தது. என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
மேலும் என்னுடைய இந்த நிலைமைக்கு ஒருவர் மட்டும் தான் காரணம், ஆனால் அவரை இங்கு ஞாபகப்படுத்த விரும்பவில்லை, இப்படி இருப்பதால் தான் நான் சினிமாவில் சுமார் 18 ஆண்டுகளுக்கு மேல் நிலையாக இருக்கின்றேன்.
இப்படியிருந்தாலும் என்னுடைய திருமணம் எங்கள் இரண்டு பேருடைய சம்மதத்தில் தான் நின்றது”. என தன்னுடைய மனதிலிருக்கும் விடயங்கள் அப்பட்டமாக கூறியிருக்கிறார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த விஷால் ரசிகர்கள்
தங்களின் ஆறுதலான பதிவுகளை பதிவிட்டு வருகிறார்கள்.