47 வயதில் ஏற்பட்ட காதல்! நடிகர் விஷால் திருமணம் செய்ய போகும் நடிகை யார் தெரியுமா?
தமிழ் சினிமாவில் இன்னமும் திருமணம் செய்யாமல் ஒரு சில நடிகர்கள் உள்ளனர். அவர்களில் முக்கியமானவர் விஷால்.இவர், சமீபத்தில் பேட்டி ஒன்றில் தனக்கு இன்னும் சில மாதங்களில் திருமணம் நடக்கவிருப்பதாக தெரிவித்தார்.
அதுமட்டுமன்றி ‛‛திருமணம் முடிவாகிவிட்டது. ஒரு மாதமாக தான் அந்த பெண்ணை காதலிக்கிறேன். இன்னும் 4 மாதத்தில் எனக்கு திருமணம் நடக்கும்'' என தெரிவித்து இருந்தார்.இது குறித்து நடிகர் கார்த்திக்கு தெரியும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் விஷால் திருமணம் செய்யப்போகும் பெண் யார் என்ற விபரம் தற்போது இணையத்தில் கசிந்து வைரலாகி வருகின்றது.
யார் அந்த பெண்?
அவர் வேறுயாருமல்ல நடிகை சாய் தன்ஷிகா தான். தஞ்சாவூரை சேர்ந்த சாய் தன்ஷிகா, ‛பேராண்மை' படத்தில் 5 நாயகிகளில் ஒருவராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.
தொடர்ந்து பரதேசி, அரவான், கபாலி உள்ளிட்ட படங்களில் நடித்தார். தெலுங்கிலும் ஓரிரு படங்களில் நடித்துள்ளார். தற்போது விஷாலுக்கும் இவருக்கும் இடையே காதல் உருவாகி திருமணம் வரை முடிவாகிவிட்டதாம்.
சாய் தன்ஷிகா நாயகியாக நடித்துள்ள ‛யோகி டா' படத்தின் விழா இன்று மாலை சென்னையில் நடைபெறுவுள்ளது. இந்த விழாவில் நடிகர் விஷால் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். இந்த சந்திப்பில் இவர்களின் திருமண அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |