ரவி மோகன் -ஆர்த்தி சர்ச்சைக்கு நடுவில்.. வைரலாகும் கெனிஷாவின் சோகமான பதிவு
நடிகர் ரவி மோகன் மற்றும் பாடகி கெனிஷா இருவரும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமண நிகழ்ச்சிக்கு வந்ததில் இருந்து அவர்கள் பற்றிய சர்ச்சை இணையத்தில் பெரும் புயலையே கிளப்பியது.
அதனை தொடர்ந்து ரவி மோகன் பற்றி ஆர்த்தி ரவி வெளியிட்ட அறிக்கையையும் இணையத்தில் சூடுபிடித்தது தொடர்ந்து அதற்கு பதில் கொடுத்து ரவி மோகன் அறிக்கை வெளியிட்டார்.
அதன் பின் ஆர்த்தியின் அம்மா வெளியிட்ட அறிக்கையும் வைரல் ஆனது. ஜெயம் ரவிக்ககா தான் 100 கோடி ரூபாய் அளவுக்கு கடன் வாங்கியதாக அவர் கூறி இருந்தார். மேலும் அவரும் ஆர்த்தியும் சேர்ந்து வாழ வேண்டும் என தான் விரும்புவதாகவும் தெரிவித்து இருந்தார்.அதனால் ரவி மோகளுக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பு வலுத்தது.
கெனிஷாவின் பதிவு..
இந்நிலையில் பாடகி கெனிஷா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ஆங்கில கவிதையை வெளியிட்டிருக்கிறார். அதில், “சத்தங்களுக்கு இடையே அமைதியான நம்பிக்கை காத்திருக்கிறது.
என் ஆன்மாவின் கஷ்டம், தனியாக நிற்கிறது. ஆனால், அவையெல்லாம் மன உறுதியை கொடுக்கிறது. இசையை பிடித்துக்கொண்டு நிற்கிறேன், காயங்களை பாடங்களாய் ஏற்கிறேன்.
ஆழ்ந்த சோகத்தின் நடுவே, மனம் பாடுகிறது. நாளை விடியல் புதிய தொடக்கத்தை நோக்கி பயணிக்கிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார். ரவி மோகன் மற்றும் ஆர்த்தி சர்ச்சைக்கு நடுவில் குறித்த பதிவு தற்போது இணையத்தில் பெருமளவில் கவனம் ஈர்த்து வருகின்றது.

இந்த ராசியினர் மருமகளை மகளாகவே நடத்தும் தலைசிறந்த மாமியாராக இருப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா?
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |