அந்த பொண்ணுக்காக நான் கையேந்தி நின்றேன்... - விஷால் சொன்ன தகவல்... - ஷாக்கான ரசிகர்கள்...!
நடிகர் விஷால்
நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருகிறார். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சினிமா தவிர, அரசியல் சார்ந்த பணிகளை அவர் மேற்கொண்டு வருகிறார்.
நடிகர் அர்ஜுனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்தார். பிறகு, தமிழில் ‘செல்லமே’ படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படமே இவருக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது.
இதனையடுத்து இவர் நடிப்பில் வெளியான ‘சண்டக்கோழி’ படம் மிகப் பெரிய வெற்றியை இவருக்கு தேடி கொடுத்தது. தமிழில் தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்று வரும் விஷால் இறுதியாக நடித்த லத்தி திரைப்படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை.

நான் கையேந்தி நின்றேன்
இந்நிலையில், தற்போது நடித்து வரும் படம் ‘மார்க் ஆண்டனி’. இப்படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். மிக விரைவில், இப்படம் திரைக்கு வர உள்ளது. சமீபத்தில் ஒரு சேனலுக்கு நடிகர் விஷால் பேட்டி கொடுத்தார்.
அந்த பேட்டியில் அவர் பேசுகையில்,
கிராமத்தில் இருக்கும் ஒரு பெண்ணுக்கு சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் படிக்க ஆசை. பெரிய வி.ஐ.பிக்கள் படிக்கும் அந்த கல்லூரியில் இப்பெண்ணுக்கு இடம் கிடைப்பது மிகவும் கடினம். இந்த விஷயம் எனக்கு தெரியவந்தது. அந்த பெண்ணுக்காக நான் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் சீட்டு கொடுங்கள் என்று கையேந்தி நின்றேன்.
நான் கேட்டதால் அப்பெண்ணிற்கு அந்தக் கல்லூரியில் இடம் கொடுத்தனர் என்றார்.