பரபரப்பான சண்டை காட்சியில் முதுகில் அடிப்பட்டு நடிகர் விஷாலுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை
சண்டை காட்சி படமாக்கப்பட்ட போது, எதிர்பாராத விதமாக நடிகர் விஷாலின் முதுகில் அடிப்பட்டு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாயாகியுள்ளது.
நடிகர் விஷால் அடுத்தடுத்து ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த படங்களிலேயே நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
விஷால், தன்னுடைய 31 ஆவது படத்தை, அறிமுக இயக்குனர் து.ப.சரவணன் என்பவர் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இடம்பெறும் சண்டை காட்சி அண்மையில் படமாக்க பட்டுள்ளது.
அப்போது விஷாலை வில்லன் தூக்கி எறிவது போன்ற காட்சியை படமாக்கியுள்ளனர். மிகவும் பாதுகாப்பான முறையில் சண்டை காட்சி எடுக்கப்பட்டு வந்த நிலையிலும், எதிர்பாராத விதமாக விஷால் ஒரு இரும்பில் மோதி கீழே விழுந்துள்ளார்.
அப்போது அவருக்கு முதுகெலும்பில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும், உடனடியாக பிசியோ தெரபி மருத்துவர்களை கொண்டு விஷாலுக்கு படக்குழுவினர் சிகிச்சை அளித்துள்ளனர். இந்த சம்பவத்தால் படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டுள்ளது.
வலி குறையாததால் விஷால் ஓரிரு நாள் ஓய்வுக்கு பின் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என கூறப்படுகிறது.
