வைரஸ்களில் இருந்து நம்மை காக்க சாப்பிட வேண்டிய உணவுகள்
கொரோனா வைரஸால் பலரும் பாதிக்கப்படும் நிலையில் சத்தாண உணவுகளை சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து அதிலிருந்து நம்மை காக்க பலனளிக்கிறது.
பாரம்பரியமாக சமையலில் பயன்படுத்தும் இஞ்சி, மிளகு, பூண்டு, மஞ்சள், வெங்காயம் போன்ற பொருட்கள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் கொண்டவை என்பது அனைவரும் அறிந்தது. இதைதவிர வேறு எந்த வகையான உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.
திராட்சை, ஆரஞ்சு, எலுமிச்சை, குடைமிளகாய், ஸ்ட்ராபெர்ரி, கீரை வகைகள் போன்றவற்றில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுவதன் மூலம், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
கொழுப்பில் கரையும் சத்துக்களின் வகையைச் சேர்ந்த வைட்டமின் ஈ பசலைக்கீரை, பாதாம், சூரிய காந்தி விதை போன்றவற்றில் உள்ளது. இது நோய் எதிர்ப்பு மண்டலத்தை சீராக இயங்கச் செய்யும்.
கிரீன் டீ நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்தது. இதில் உள்ள அமினோ அமிலங்கள், கிருமித்தொற்றை தடுக்கும் நொதிகளை உற்பத்தி செய்யும். நோய் எதிர்ப்பு செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதற்கு வைட்டமின் டி அவசியமானது.
இது முட்டையின் மஞ்சள் கரு, காளான்கள், மீன்கள் போன்ற உணவுகள் மூலமும், சூரிய ஒளி மூலமும் கிடைக்கும். தயிர், யோகர்ட், ஊறுகாய் மற்றும் நொதிக்கவைக்கப்பட்ட உணவுப்பொருட்களில் இருக்கும் புரோபையாட்டிக் நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும் தன்மை கொண்டது.
மேலும் வயிற்றின் ஆரோக்கியமான செயல்பாட்டுக்கும் இது உதவும்.
நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டுக்கு முக்கியமான தாது ‘ஜிங்க்’. இது நண்டு, இறால், லாப்ஸ்டர் போன்ற ஓடு இருக்கும் கடல் உணவுகள், விலங்குகளின் இறைச்சி போன்றவற்றில் உள்ளன.