துபாய் கடற்கரையில் ஆட்டம் போடும் கோலி, ரோஹித் சர்மா
துபாயில் 15வது ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகிறது.
1984ம் ஆண்டு முதல் நடந்து வரும் இப்போட்டிகள், 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும்.
கடந்த மாதம் 27ம் தேதி தொடங்கிய போட்டிகள் செப்டம்பர் 11ம் தேதி வரை நடக்கிறது.
இதில் பங்கேற்கும் 6 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் அணிகளும், 'பி' பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும். சூப்பர் 4 சுற்றுக்கு வரும் 4 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும்.
இதன் முடிவில் டாப்-2 இடங்களை பெறும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்கும்.
இதற்காக துபாய் சென்றுள்ள இந்திய அணியினர் கடற்கரையில் ஆட்டம் போடும் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.
ரோஹித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா உட்பட பயிற்சியாளர் ராகுல் டிராவிடும் செம ஜாலியாக விளையாடுகின்றனர்.
பிசிசிஐன் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியான இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
When #TeamIndia hit ?.?.?.?.?.?! ?
— BCCI (@BCCI) September 2, 2022
Time for some surf, sand & beach volley! ?#AsiaCup2022 pic.twitter.com/cm3znX7Ll4