ஏபிடி வில்லியர்ஸின் ஓய்வு - உருக்கமான பதிவை வெளியிட்ட நண்பர் விராட் கோலி!
தென் ஆப்பிர்க்காவின் வீரர் ஏபிடி வில்லியர்ஸுன் ஓய்வு உலக கிரிக்கெட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்களும் சோகத்துடன் கமெண்ட்ஸ்களை பதிவிட தொடங்கி விட்டனர்.
இந்த நிலையில், அவரின் ஓய்வுக்கு ஆர்சிபி அணியின் முன்னாள் கேப்டனும், நண்பருமான விராட் கோலி ட்விட் செய்து இருக்கிறார். அந்த பதிவில், உங்கள் ஓய்வு என் இதயத்தை புண்படுத்தியது.
இந்த காலகட்டத்தில் நான் சந்தித்ததிலேயே மிகவும் சிறந்த வீரரும், உத்வேகம் தரக்கூடிய வீரரும் டிவில்லியர்ஸ் தான். மேலும், நீங்கள் செய்தவைக்காகவும், ஆர்சிபிக்கு வழங்கியவைக்காகவும் பெருமைப்படலாம் சகோதரா? நமது உறவு விளையாட்டிற்கு அப்பாற்பட்டது.
அது எப்போதும் தொடரும். இது என் இதயத்தைக் காயப்படுத்துகிறது. ஆனால் நீங்கள் எப்போதும் செய்வது போல் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்குமான சிறந்த முடிவை எடுத்தீர்கள் எனக்குத் தெரியும் எனக் கூறியுள்ளார்.
This hurts my heart but I know you've made the best decision for yourself and your family like you've always done. ?I love you ? @ABdeVilliers17
— Virat Kohli (@imVkohli) November 19, 2021