தலைவன் வந்துவிட்டார்!.. தோனி அடித்த ஃபினிஷிங் ஷாட்டிற்கு விராட் கோலி போட்ட ட்வீட்! ட்ரெண்டாக்கும் ரசிகர்கள்
ஐபில் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில், டெல்லி கேபிடல்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு நுழைந்தது.
முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் சேர்த்தது. 173 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி 2 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இந்த நிலையில், இந்த போட்டியில் களமிறங்கிய தோனி கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்டது. இதனை தோனி பவுண்டரிக்கு விளாசி சென்னை அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார்.
இதனால், ஒட்டுமொத்த ரசிகர்களும் தோனி திரும்ப வந்துவிட்டார் என ஆர்பரித்தனர். பல பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் அனைவரும் பாராட்டிய நிலையில், இந்திய அணியின் கேப்டன், மற்றும் ஆர்சிபியின் கேப்டனுமான விராட் கோலி ட்வீட் செய்து பாராட்டி இருக்கிறார்.
அந்த பதிவில், அரசன் திரும்ப வந்துவிட்டார். ஆட்டத்தில் மிகச்சிறந்த ஃபினிஷர். இன்று மீண்டும் ஒருமுறை நான் என்னுடைய இருக்கையில் இருந்து துள்ளிக்குதித்தேன் தோனி என பதிவிட இந்த ட்வீட் பயங்கர ட்ரெண்ட் ஆகி இருக்கிறது.
Anddddd the king is back ❤️the greatest finisher ever in the game. Made me jump Outta my seat once again tonight.@msdhoni
— Virat Kohli (@imVkohli) October 10, 2021