டி20-யை அடுத்து ஆர்சிபி அணியின் கேப்டன் பதவியிலிருந்தும் விலகிய விராட் கோலி- வைரலாகும் உருக்கமான வீடியோ!
இந்திய அணியின் நட்சத்திர கேப்டனாக விலங்கியவர் தான் விராட் கோலி. இவரின் தலைமையில் பல வெற்றிகளை இந்திய அணி பெற்று வருகிறது.
ஆனால், சமீப நாட்களாக தொடர் விமர்சனங்களாலும், பேட்டிங்கில் முழு கவனத்தை செலுத்த முடியாமலும் திணறி வந்ததால், கடந்த நாட்களுக்கு முன்பு இந்திய டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், தற்பொழுது நடப்பு ஐபிஎல் 2021-க்கு தொடருக்குப்பின் பெங்களுரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார்.
33-வயதாகவும் விராட் கோலி உலகின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவராக விளங்கி வருகிறார். மூன்று வடிவிலான போட்டிகளுக்கும் கேப்டனாக இருப்பதால் ஏற்பட்டு இருக்கும் பணிச்சுமையை குறைக்கும் வண்ணம் விராட் கோலி, ஆர்சிபி கேப்டன் பதவியில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது, ஆர்சிபி கேப்டன் பதவியிலிருந்து விலகுகிறேன். நான் கேப்டன் பதவியிலிருந்து விலகினாலும் ஒரு பேட்ஸ்மேனாக அணிக்கு எனது பங்களிப்பை முழுமையாக கொடுப்பேன். மேலும் எனது கடைசி ஐபிஎல் போட்டி வரை ஆர்சிபி அணிக்காக விளையாடுவேன்.
ஆர்சிபி அணியின் கேப்டனாக நான் இருந்த நேரத்தில் எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார். விராட் கோலி தலைமையில் இந்திய அணி 95 போட்டிகளில் விளையாடி 65-ல் வெற்றியும் 27-ல் தோல்வியும் அடைந்துள்ளது. 1 போட்டி டிராவில் முடிந்துள்ளது. 2 போட்டிகளில் முடிவு இல்லை.... இவரின் அதிர்ச்சியான இந்த முடிவுக்கு ரசிகர்கள் நெட்டிசன்கள் என அனைவரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
Virat Kohli to step down from RCB captaincy after #IPL2021
— Royal Challengers Bangalore (@RCBTweets) September 19, 2021
“This will be my last IPL as captain of RCB. I’ll continue to be an RCB player till I play my last IPL game. I thank all the RCB fans for believing in me and supporting me.”: Virat Kohli#PlayBold #WeAreChallengers pic.twitter.com/QSIdCT8QQM