வாய்ப்பு கொடுத்த தோனிக்கு நன்றி! டெஸ்ட் போட்டி கேப்டன்சி பதவியில் இருந்து விலகிய விராட்கோலி; உருக்கமான பதிவு!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி சமீப நாட்களாக பல பிரச்சினைகளில் சிக்கி மனமுடைந்து டி20 போட்டிகளின் கேப்டன்சி இருந்து விலகினார். அதன் பின்னர், பிசிசிஐ கொடுத்த அழுத்ததினால், ஒரு நாள் கேப்டன்சி பதவியையும் பறித்தனர்.
பின்னர், விராட் கோலி டெஸ்ட் அணிக்கு மட்டும் கேப்டனாக நீடித்தார். இந்நிலையில், இந்திய அணி தென்னாப்பிரிக்கா இடையே சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகளை விளையாடி வந்தது.
இதில், இந்திய அணி 1 வெற்றியும், அடுத்தடுத்து தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்று தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது. இதனால், விராட்கோலி தற்போது இந்திய அணி தோல்வியால் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியது குறித்து விராட் கோலி ட்விட்டரில் வெளியிட்டுள்ள கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக தெரிவித்து இருக்கிறார்.
அதில், கூறியிருப்பதாவது, “ 7 ஆண்டுகள் கடின உழைப்பு, முயற்சியின் மூலம் இந்திய அணியை சரியான பாதையில் கொண்டு செல்லப்பட்டது. என்னுடைய பணியை நேர்மையாக செய்திருக்கிறேன். எதுவுமே ஒரு கட்டத்தில் முடிவுக்கு வர வேண்டும், என்னை பொறுத்தவரையில் இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் பதவி தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
மேலும், எனது கேரியரில் பல ஏற்ற, இறக்கங்களை சந்தித்திருக்கிறேன். ஆனால் என்றுமே அவநம்பிக்கை கொண்டிருக்கவில்லை.. நாட்டுக்காக வழிநடத்தும் பதவியை அளித்ததற்காகவும், நீண்ட காலம் அந்த பணியில் இருக்க வாய்ப்பு அளித்ததற்காகவும் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது அணி வீரர்களுக்கு பெரிய நன்றி. உங்களால் இந்த பயணம் மிகவும் அழகானதாகவும், நினைவுகளோடும் கடந்தது. எனக்கு உறுதுணையாக இருந்த ரவி சாஸ்திரி பெரிய நன்றி.
இறுதியாக எம்.எஸ்.தோனி அவர்களுக்கு ஒரு பெரிய நன்றியை தெரிவிக்கிறேன். எனக்குள் இருக்கும் கேப்டனுக்கான தகுதியை கண்டறிந்து, நம்பி எனக்கு உறுதுணையாக இருந்து முன்னேற்றியவர்.” என கூறியுள்ளார்.
இவரின் இந்த திடீர் அறிவிப்பால், இந்திய அணி மட்டுமின்றி ரசிகர்களும் சோகத்திலேயே மூழ்கியுள்ளனர். இனி விராட் கோலியை ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமே நாம் காணமுடியும்.
— Virat Kohli (@imVkohli) January 15, 2022