அம்மாவின் புகைப்படத்தை பகிர்ந்து விராட்கோலி வாழ்த்து; இணையத்தில் வைரல்!
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனான விராட் கோலி சமீப நாட்களாகவே சர்ச்சையான விஷயங்களை சந்தித்து வந்தார். இருந்தாலும், எதையும் கவனத்தில் கொள்ளாமல் தனது ஆட்டத்தில் மட்டும் அவர் கவனமாக இருந்து வருகிறார். '
தற்போது தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ள கோலி இரண்டாவது போட்டியில் முதுகுவலி காரணமாக இடம்பெறாமல் வெளியில் அமர்ந்துள்ளார்.
இதனால், மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இன்று ஜனவரி 6-ஆம் தேதி தனது அம்மாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள விராட்கோலி “ஹாப்பி பர்த்டே மா” என்று அவரது தாயுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
மேலும், அம்ரிஸ்டர் நகரில் இருக்கும் பொற்கோவிலில் எடுக்கப்பட்டுள்ள இந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ள அவர் தனது தாய்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் அவருடைய அம்மாவின் புகைப்படம் தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.
Happy Birthday Maa ❤️ pic.twitter.com/umHyXZrvJJ
— Virat Kohli (@imVkohli) January 6, 2022