உங்கள் அன்பிற்கு நன்றி! ஆர்சிபியின் தோல்விக்கு பின் விராட் கோலியின் உருக்கமான பதிவு!
ஐபிஎல் தொடரின் குவாலிபயர் 2 பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 157 ரன்களை மட்டுமே அடித்திருந்தது.
பின்னர் களமிறங்கிய ராஜஸ்தான் அணி பட்லரின் அதிரடியால், 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. சிறப்பாக விளையாடிய ஜாஸ் பட்லர் 106* ரன்களுடன் களத்தில் இருந்தார்.
இதனால், கோப்பையை வெல்லும் கனவு பெங்களூர் அணிக்கு பறிப்போனது. இதன் பின்னர் பேசிய கேப்டன் டூ ப்ளசிஸ் ராஜஸ்தான் அணியை பாராட்டியும், பெங்களூர் அணி ரன்களை குவிக்க முடியாமல் திணறியதையும் சோகத்துடன் மீண்டும் அடுத்த ஆண்டில் வருவோம் என தெரிவித்து இருந்தார்.
அணியின் வீரர்கள் ஒவ்வொருவரும் கருத்துகளை பதிவிட, நட்சத்திர வீரரான விராட் கோலி, ட்விட்டரின் மூலம் ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துள்ளார்.
மேலும், சில நேரங்களில் வெற்றி பெறுவீர்கள். சில நேரங்களில் நீங்கள் வெற்றி பெறாமலும் போவீர்கள். ஆனால் விளையாடிய எல்லாபோட்டிகளிலும் எப்போதும் ரசிகர்களாகிய நீங்கள் எங்களை ஆதரித்து வருகிறீர்கள்.
உங்களுடைய ஆதரவு மற்றும் அன்பு எங்களுடைய கிரிக்கெட்டை மேலும் அழகாக மாற்றுகிறது. தொடர்ந்து உங்களின் அபரிதமான அன்புக்கு நன்றி.
அடுத்த சீசனில் சந்திப்போம் என ரசிகர்களுக்கு நன்றி கூறி விராட் கோலி சிறப்பு பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து உள்ளனர்.
Sometimes you win, and sometimes you don't, but the 12th Man Army, you have been fantastic, always backing us throughout our campaign. You make cricket special. The learning never stops. (1/2) pic.twitter.com/mRx4rslWFK
— Virat Kohli (@imVkohli) May 28, 2022